Showing posts with label நீதிமொழிகள். Show all posts
Showing posts with label நீதிமொழிகள். Show all posts

Saturday, May 8, 2021

நீதிமொழிகள்:1:10 / Proverbs:1:10

 நீதிமொழிகள்:1:10

என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.


இந்த வசனத்தில் சாலமோன் என் மகனே என்று குறித்த தொடங்குகிறார்.  கெட்ட சகவாசத்தினால் வரும் ஆபத்தைக் குறித்து எச்சரிக்கிறார். சிலர் செய்யும் செயல்கள் அவர்கள் பாவிகள் என்பதை நமக்கு காட்டிக் கொடுத்து விடும்.

அப்படிப்பட்டவர்கள் அவர்கள் செய்யும் பாவச்செயல்களில் நம்மையும் பங்கெடுக்க சொல்லி ஆசை வார்த்தைகளை பேசுவார்கள்.   நயம் காட்டுவார்கள் நம்மைக் கவர்ந்திழுப்பார்கள். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் நாம் சம்மதிக்கக் கூடாது.

நாம் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகவும், புத்திசாலியாகவும் இருக்க வேண்டும்.

நம் சுயம் அப்பாவச் செயல்களுக்கு உட்படாவிட்டால் அவைகள் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

நாம் தீர்மானங்கள் எடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எல்லோரும் செய்கிறார்கள், என் நண்பர்களுக்கு கம்பெனி கொடுக்கிறேன் என்ற பெயரில் எந்த பாவத்திற்கும் துணை போய்விடாதீர்கள். சாத்தான் உங்களை அதற்குள் விழத்தள்ளிவிடுவான். எனவே கவனம் தேவை.

                                    Proverbs : 1: 10

         My Son, If Sinners Entice You, Do Not Give In To Them.

In this verse Solomon begins by mentioning as my son. He warns his son of the danger posed by bad association. The actions of some people will show us that they are sinners and they are in a bad company.

Such people will speak words of desire telling us to share in the sins they commit. They will entice you. But we must not agree to all of this.

We need to be careful and smart in choosing friends.  Their sinful habits will not affect us if we do not subject ourselves to their desires and sins.

We must be very careful in making decisions. Do not go along with any sin in the name of giving company to my friends. Satan will lure you into it. So be careful when you are in the company of your friends.

Previous Verse  / Next Verse

Friday, May 7, 2021

நீதிமொழிகள்:1:9 / Proverbs:1:9

 நீதிமொழிகள்:1:9

அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.

பெற்றோரின் புத்திமதிகளையும் போதகத்தையும் கேட்டு நடக்கும் பிள்ளைகளின் வாழ்வு அலங்காரமாய் காணப்படும். தலையில் வைக்கப்படும் கிரீடத்தை போலவும் கழுத்தில் அணியப்படும் ஆபரணங்களை போலும் வாழ்க்கை அழகாக இருக்கும்.

ஒரு குழந்தைக்கு பெற்றோரால் கொடுக்கப்படும் நல்லொழுக்கப் போதனைகளைப் போன்ற மிகப் பெரிய சொத்து வேறொன்றுமில்லை.  அதனை சுதந்தரித்துக் கொண்டு வாழ்வில் நடைமுறைப்படுத்தி வாழ்வது பிள்ளைகள் பெற்றோருக்குச் கொடுக்கும் மிகப்பெரிய சந்தோஷம்.

3 யோவான் 4-ம் வசனம் சொல்லுகிறது "என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை." எனவே பெற்றோம் பணம் சம்பாதித்துக் கொடுப்பதைக் காட்டிலும் சந்தோஷத்தைக் கொடுப்பதே சிறந்தது.

Proverbs : 1: 9

For they will be graceful ornaments on your head, And chains about your neck.


The lives of children who listen to their parents' advice and teachings can be seen as decorative. Life is as beautiful as a crown placed on the head and ornaments worn around the neck.

There is no greater asset than the moral teachings given by a parent to a child. Being independent and living life to the fullest is the greatest joy that children can bring to their parents.

The verse 4 in the third epistle of John says, "I have no greater joy than to hear that my children walk in the truth." So it is better to give happiness than to earn money.

Previous Verse  / Next Verse

Thursday, May 6, 2021

நீதிமொழிகள்:1:8 / Proverbs:1:8

 நீதிமொழிகள்:1:8

என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

நீதிமொழிகள்:1:8

பிள்ளைகளின் வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுகிறவர்கள் தாய், தகப்பன் மட்டுமே.  அவர்கள் வாழ்வில் உயர வேண்டும், எந்த பிரச்சனைகளிலும் பிள்ளைகள் சிக்கிக் கொள்ளக் கூடாது  என்று தான் பல அறிவுரைகளையும் அவர்கள் அனுபவங்களில் கற்றுக்கொண்ட வாழ்வின் நுணுக்கங்களை அறிவுரைகளாக அளிப்பர்.  அதனை ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டுமென இவ்வசனம் கட்டளையிடுகிறது, சிறு வயது முதலே தகப்பன் புத்தியைக் கேட்டு தாயின் போதகத்தைத் தள்ளாமல் நடக்கும் குழந்தைகள் தான் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவார்கள்.  

Proverbs: 1: 8

Listen, My Son, To Your Father's Instruction And Do Not Forsake Your Mother's Teaching.

Proverbs: 1: 8

Only mother and father are happy to see their children grow. They will give you a lot of advice that they should rise in life and that children should not get into any trouble. They will give advice on the nuances of life learned in experiences. This verse commands us to accept it and walk in it.

Only children who listen to their father's instruction from an early age and do not forsake their mother's teachings will be better off in the future.

Previous Verse  / Next Verse


Wednesday, May 5, 2021

நீதிமொழிகள் :1: 7

 நீதிமொழிகள் :1: 7

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

கர்த்தருடைய வார்த்தைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ்வதே கர்த்தருக்குப் பயப்படுதல் ஆகும். நாம் சில காரியங்களுக்குப் பயப்படும் பொழுது அதற்கு முழுவதும் இணங்கி நடப்போம். இல்லையென்றால் அதனை அல்லது அவர்களை விட்டு விலகி ஓடுவோம். 

இதில் நாம் முதல் சொன்னது போல கர்த்தருக்குப் பயப்படும் பொழுது நாம் ஞானமுள்ளவர்களாய் இருப்போம்.  எந்தெந்த காரியங்களில், எந்தெந்த சூழ்நிலைகளில் எப்படி நடக்க வேண்டும், பேச வேண்டும், சிந்திக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்பதைக் கர்த்தர் போதிப்பார்.  இதனையே ஞானத்தின் ஆரம்பம் என்று கூறப்பட்டுள்ளது.  ஞானத்தைப் பெறுதல் மட்டுமல்ல அதனை முறையாகப் பயன்படுத்தவும் நாம் அறிந்திருக்க வேண்டும். 

ஆனால் கர்த்தருக்குப் பயப்படாதவர்கள் மூடர்கள் ஆவர்.  பிறர் கூறும் போதகம், மற்றும் அறிவுரைகளைக் கேட்காமல் அசட்டை பண்ணுவார்கள்.  பெரியோர் மற்றும், பெற்றோர், ஆசிரியர்களின் போதகத்தையும் ஞானத்தையும் கேட்கத் தவறுகிறவர்கள் மூடர்கள் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

யாக்கோபு :1:5

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறையுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன். அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

Proverbs: 1: 7

The fear of the LORD is the beginning of knowledge; But fools despise wisdom and instruction. 

The fear of the Lord is to live in complete obedience to the word of the Lord. When we are afraid of certain things we will fully comply with it. Otherwise we will run away from it or them.

We will be wise when we fear the Lord as we said earlier. The Lord will teach us how to walk, speak, think, and see in different matters and circumstances. This is said to be the beginning of wisdom. We need to know not only how to acquire wisdom but also how to use it properly.

But those who do not fear the Lord are fools. They will ignore the teachings of others, and do not listen to advice. Scripture says that those who fail to listen to the teachings and wisdom of adults and, parents and teachers are fools.

James:1:5

If any of you lack wisdom, let him ask of God, that giveth to all men liberally, and upbraideth not; and it shall be given him.

Previous Verse  / Next Verse

Tuesday, May 4, 2021

நீதிமொழிகள் :1:6

 நீதிமொழிகள் :1:6

நீதிமொழியையும்,  அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்து கொள்வான்.

    பழமொழிகளையும் அதின்  அர்த்தங்களையும் புரிந்து கொள்வது எளிதான காரியம் அல்ல.  பரிசுத்த ஆவியானவர் நமக்கு தெரியப்படுத்தினால்  மட்டுமே அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.  சீடர்களுக்குக் கூட இயேசு உவமைகளை விளக்கினார்.

    ஆனால் புத்திமானோ நீதிமொழியையும் அதின் அர்த்தங்களையும், ஞானிகளின் வாக்கியங்களில் புதைந்துள்ள உண்மைகளையும் கூட அறிந்து கொள்ள முடியும்.  அதன் மூலம் அவரின் மனம் கூர்மையாகின்றன.  வாழ்வில் குழப்பங்கள் வரும் போது நீதிமொழிகள் அந்தக் குழப்பங்களிலிருந்து விடுபடுவதற்குத் தேவையான ஞானத்தைத் தருகிறது.

Previous Verse  / Next Verse

Monday, May 3, 2021

நீதிமொழிகள் :1:5

 நீதிமொழிகள்:1:5

புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;

புத்திமான் நீதிமொழிகளைக் கேட்கிறான்.  கேட்கிறதற்கு விரைவாக இருக்கிறான்.  அதன் மூலம் அறிவைப் பெற்றுத் தேறுகிறான். 

விவேகமுள்ள மனிதன் வயது முதிர்ந்த அனுபவசாலிகளிடம் ஆலோசனைப் பெற விரும்புவான்.  நல்ல ஆலோசனைகளை பெறுவதன் மூலம் பல தவறுகளில் சிக்காமல் இருக்க முடியும்.  ஞானமாய் சரியானதைத் தெரிந்தெடுத்தக்க முடியும்.  கர்த்தரை நம்புகிறவர்களுக்கு நல்லாலோசனைகளைக் கொடுப்பதற்குக் கூட  ஞானம் கொடுக்கப்படும். 

சங்கீதம்:119:98

நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு, என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.

Sunday, May 2, 2021

நீதிமொழிகள்:1:4

 நீதிமொழிகள்:1:4

இவைகள் பேதைகளுக்கு  வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.


நீதிமொழிகள் புத்தகத்தை எழுத கர்த்தர் சாலொமோனை ஊக்கப்படுத்தினத்திற்கு இன்னொரு காரணம் இந்த வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் அனைவரும் அறிவில் குறைந்தவர்களாகப்  பிறந்தவர்களே.   அப்படிப்பட்ட அறிவில் குறைந்தவர்களுக்கு ஞானத்தைக் கற்பிப்பதற்கு நீதிமொழிகள் புத்தகம் அருளப்பட்டிருக்கிறது. 

பேதைகள் என்பது அறிவில் எளியவர்களைக் குறிக்கிறது. இவர்களுக்கும் நீதிமொழிகள் விவேகத்தைக் கொடுக்கிறது.  உள்ளொன்று வைத்து புறம்பே வேறு ஒன்றைப் பேசத்தெரியாதவர்களுக்குக் கூட விவேகத்தைக் கொடுக்கிறது. 

அடுத்ததாக இளைஞர்களுக்கு அறிவும் விவேகமும் நீதிமொழிகள் வாயிலாகக் கிடைக்கிறது. ஒரு தவறு செய்ய முற்படும் பொது சிந்தித்து செயல்படுவது விவேகமாகக் கருதப்படுகிறது,  அச்சூழல்களில் சிந்தித்து பொறுப்பான, அறிவார்ந்த முடிவை ஞானமாய் எடுக்க உதவுகிறது.  

சங்கீதம்:119:130
உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். 

சங்கீதம்:119:9
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின் படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே. 

Thursday, April 29, 2021

நீதிமொழிகள்:1:3

 நீதிமொழிகள்:1:3

விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.  


நீதிமொழிகளை வாசிப்பதன் மூலம் நாம் விவேகம், நீதி, நியாயம், நிதானம் இவைகளை நம் வாழ்வில் கடைபிடிப்பதற்கான அறிவை அடையலாம்.  நாம் பிறப்பிலே சுயநலவாதிகளாகவும், பாவத்தோடும் பிறந்திருக்கிறோம்.  கர்த்தர் நம்மை ஞானமுள்ளவர்களாக்கும் வரைக்கும் நாம் சுயநலத்திற்கும், பாவத்திற்கும், முரட்டாட்டத்திற்கும் அடிமைப்பட்டு தான் இருப்போம்.

விவேகம் என்பது ஒரு தடுமாற்றமான சூழ்நிலையில் சரியான முடிவை தேர்ந்தெடுப்பதைக் குறிக்கிறது. 

நீதிமொழிகள் புத்தகம் எது சரி எது தவறு என்று அறிவுறுத்துவதன் மூலம் நமக்கு நீதியைக் கற்பிக்கிறது. 

நியாயம் எப்பொழுதும் நீதியோடு தொடர்புபடுத்தப்படுகிறது.  ஞானமுடையவர்கள் ஒரு பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்து கொண்டு அதற்கான சரியான தீர்ப்பை வழங்குவார்கள். 

நிதானம்  என்பது எல்லோரும் விரும்பக்கூடிய வகையில் பொறுமையோடு எல்லாவற்றையும் கையாள்வது. 

நீதிமொழிகள் :1:2

Monday, March 29, 2021

நீதிமொழிகள் :1:2


நீதிமொழிகள் :1:2

இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,

நீதிமொழிகள் மூலம் ஞானத்தையும்போதகத்தையும் ஒருவர் அறிந்து கொள்ளலாம்.  மேலும் புத்திமதிகளையும் உணர்ந்து கொள்ளலாம். 

ஞானம் என்பது வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு தெளிவைக் குறிக்கிறது.  தார்மீக ஒழுக்கத்தையும் நீதிமொழிகள் எடுத்துக் கூறுகிறது. 

ஞானம் என்பது அறிவு மட்டுமல்லதெய்வீக பயத்துடன் கர்த்தர் விரும்பிய வாழ்க்கையை வாழும் தெளிவை ஞானம் குறிப்பிடுகிறது.  நல்லது எது கேட்டது  எது என்பதையும் பகுத்தறிவது ஞானமே.

ஞானத்தில்  சாலொமோன் தன் வாழ்வில் அதைப் பயன்படுத்த தவறினார்.  அவரது மகன் ரெகோபெயாமும் எல்லா புத்திமதிகளைப் பெற்றுக் கொண்டாலும், அதை ஞானத்தோடு பயன்படுத்த தவறினான்.  தன் தந்தையின் போதனைகளை நிராகரித்தார். 

நீதிமொழிகள் :1:1