நீதிமொழிகள் :1:6
நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்து கொள்வான்.
பழமொழிகளையும் அதின் அர்த்தங்களையும் புரிந்து கொள்வது எளிதான காரியம் அல்ல. பரிசுத்த ஆவியானவர் நமக்கு தெரியப்படுத்தினால் மட்டுமே அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். சீடர்களுக்குக் கூட இயேசு உவமைகளை விளக்கினார்.
ஆனால் புத்திமானோ நீதிமொழியையும் அதின் அர்த்தங்களையும், ஞானிகளின் வாக்கியங்களில் புதைந்துள்ள உண்மைகளையும் கூட அறிந்து கொள்ள முடியும். அதன் மூலம் அவரின் மனம் கூர்மையாகின்றன. வாழ்வில் குழப்பங்கள் வரும் போது நீதிமொழிகள் அந்தக் குழப்பங்களிலிருந்து விடுபடுவதற்குத் தேவையான ஞானத்தைத் தருகிறது.
No comments:
Post a Comment