Showing posts with label Proverbs 1:1. Show all posts
Showing posts with label Proverbs 1:1. Show all posts

Tuesday, May 4, 2021

நீதிமொழிகள் :1:6

 நீதிமொழிகள் :1:6

நீதிமொழியையும்,  அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்து கொள்வான்.

    பழமொழிகளையும் அதின்  அர்த்தங்களையும் புரிந்து கொள்வது எளிதான காரியம் அல்ல.  பரிசுத்த ஆவியானவர் நமக்கு தெரியப்படுத்தினால்  மட்டுமே அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.  சீடர்களுக்குக் கூட இயேசு உவமைகளை விளக்கினார்.

    ஆனால் புத்திமானோ நீதிமொழியையும் அதின் அர்த்தங்களையும், ஞானிகளின் வாக்கியங்களில் புதைந்துள்ள உண்மைகளையும் கூட அறிந்து கொள்ள முடியும்.  அதன் மூலம் அவரின் மனம் கூர்மையாகின்றன.  வாழ்வில் குழப்பங்கள் வரும் போது நீதிமொழிகள் அந்தக் குழப்பங்களிலிருந்து விடுபடுவதற்குத் தேவையான ஞானத்தைத் தருகிறது.

Previous Verse  / Next Verse

Monday, May 3, 2021

நீதிமொழிகள் :1:5

 நீதிமொழிகள்:1:5

புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;

புத்திமான் நீதிமொழிகளைக் கேட்கிறான்.  கேட்கிறதற்கு விரைவாக இருக்கிறான்.  அதன் மூலம் அறிவைப் பெற்றுத் தேறுகிறான். 

விவேகமுள்ள மனிதன் வயது முதிர்ந்த அனுபவசாலிகளிடம் ஆலோசனைப் பெற விரும்புவான்.  நல்ல ஆலோசனைகளை பெறுவதன் மூலம் பல தவறுகளில் சிக்காமல் இருக்க முடியும்.  ஞானமாய் சரியானதைத் தெரிந்தெடுத்தக்க முடியும்.  கர்த்தரை நம்புகிறவர்களுக்கு நல்லாலோசனைகளைக் கொடுப்பதற்குக் கூட  ஞானம் கொடுக்கப்படும். 

சங்கீதம்:119:98

நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு, என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.

Sunday, May 2, 2021

நீதிமொழிகள்:1:4

 நீதிமொழிகள்:1:4

இவைகள் பேதைகளுக்கு  வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.


நீதிமொழிகள் புத்தகத்தை எழுத கர்த்தர் சாலொமோனை ஊக்கப்படுத்தினத்திற்கு இன்னொரு காரணம் இந்த வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் அனைவரும் அறிவில் குறைந்தவர்களாகப்  பிறந்தவர்களே.   அப்படிப்பட்ட அறிவில் குறைந்தவர்களுக்கு ஞானத்தைக் கற்பிப்பதற்கு நீதிமொழிகள் புத்தகம் அருளப்பட்டிருக்கிறது. 

பேதைகள் என்பது அறிவில் எளியவர்களைக் குறிக்கிறது. இவர்களுக்கும் நீதிமொழிகள் விவேகத்தைக் கொடுக்கிறது.  உள்ளொன்று வைத்து புறம்பே வேறு ஒன்றைப் பேசத்தெரியாதவர்களுக்குக் கூட விவேகத்தைக் கொடுக்கிறது. 

அடுத்ததாக இளைஞர்களுக்கு அறிவும் விவேகமும் நீதிமொழிகள் வாயிலாகக் கிடைக்கிறது. ஒரு தவறு செய்ய முற்படும் பொது சிந்தித்து செயல்படுவது விவேகமாகக் கருதப்படுகிறது,  அச்சூழல்களில் சிந்தித்து பொறுப்பான, அறிவார்ந்த முடிவை ஞானமாய் எடுக்க உதவுகிறது.  

சங்கீதம்:119:130
உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். 

சங்கீதம்:119:9
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின் படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே. 

Tuesday, March 16, 2021

நீதிமொழிகள் :1:1

     


    நான் கடந்த பல வருடங்களாக நீதிமொழிகள் புத்தகத்தில் தினமும் ஒவ்வொரு அதிகாரம் வாசித்து வருகிறேன்.  ஆனாலும் அதனைப் பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. அதன் விளைவாக நாளுக்கு ஒரு வசனத்தை வாசித்து தியானித்தேன்.

    வேத ஆராய்ச்சி வேதாகமம் மற்றும் நீதிமொழிகள் பற்றிய குறிப்புகள் வழியாக நான் கற்று கொண்டதையும்கர்த்தர் எனக்கு உணர்த்தின காரியங்களையும் குறிப்புகளாக எழுதி வைத்ததையும் இங்கே பதிவிட்டிருக்கிறேன். இதை வாசிக்கும் ஒவ்வொருவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    நீதிமொழிகள் முதலாம் அதிகாரம் இந்த புத்தகத்தின் நோக்கம் பற்றிய தெளிவான விளக்கத்தை அளிக்கிறது.  இந்த புத்தகத்தை எழுதியவர் பற்றியும், சாலொமோனின் பரம்பரைப் பற்றியும், அவர் யாருக்கு எழுதுகிறார் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.  பாவத்திற்கு எதிரான எச்சரிக்கைகள் நிறைந்துள்ள புத்தகம் இது.  தன் மகன் புத்திசாலித்தனமாக விவேகத்தோடும், ஞானத்தோடும் செயல்படவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளது.

நீதிமொழிகள் :1:1

தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:

நீதிமொழிகள் யாரால் எழுதப்பட்டது என்பதை இவ்வசனம் கூறுகிறது. இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதிற்கும் பத்சேபாளுக்கும் பிறந்த இரண்டாவது குமாரனாகிய சாலொமோன் எழுதிய நீதிமொழிகள்.  தாவீது மற்றும் சாலொமோன் இருவரும் தனித்தனியே 40 வருடங்கள் இஸ்ரவேலை ஆண்டனர்.

சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவானபோதுகர்த்தரிடம் இருந்து ஞானத்தையும்அறிவையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.  அது அவருக்குச் செல்வத்தையும்மரியாதையையும்புகழையும் தேடித்தந்தது.

ஞானத்தில்  சிறந்து விளங்கின சாலொமோன் தன் வாழ்வில் அதைப் பயன்படுத்த தவறினார்.  அவரது மகன் ரெகோபெயாமும் எல்லா புத்திமதிகளைப் பெற்றுக் கொண்டாலும், அதை ஞானத்தோடு பயன்படுத்த தவறினான்.  தன் தந்தையின் போதனைகளை நிராகரித்தார்.