Wednesday, April 27, 2022

Proverbs : 1: 11

நான் கடந்த பல வருடங்களாக நீதிமொழிகள் புத்தகத்தில் தினமும் ஒவ்வொரு அதிகாரம் வாசித்து வருகிறேன்.  ஆனாலும் அதனைப் பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. அதன் விளைவாக நாளுக்கு ஒரு வசனத்தை வாசித்து தியானித்தேன்.

    வேத ஆராய்ச்சி வேதாகமம் மற்றும் நீதிமொழிகள் பற்றிய குறிப்புகள் வழியாக நான் கற்று கொண்டதையும்கர்த்தர் எனக்கு உணர்த்தின காரியங்களையும் குறிப்புகளாக எழுதி வைத்ததையும் இங்கே பதிவிட்டிருக்கிறேன். இதை வாசிக்கும் ஒவ்வொருவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    நீதிமொழிகள் முதலாம் அதிகாரம் இந்த புத்தகத்தின் நோக்கம் பற்றிய தெளிவான விளக்கத்தை அளிக்கிறது.  இந்த புத்தகத்தை எழுதியவர் பற்றியும், சாலொமோனின் பரம்பரைப் பற்றியும், அவர் யாருக்கு எழுதுகிறார் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.  பாவத்திற்கு எதிரான எச்சரிக்கைகள் நிறைந்துள்ள புத்தகம் இது.  தன் மகன் புத்திசாலித்தனமாக விவேகத்தோடும், ஞானத்தோடும் செயல்படவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளது.

நீதிமொழிகள் :1:1

தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:

நீதிமொழிகள் யாரால் எழுதப்பட்டது என்பதை இவ்வசனம் கூறுகிறது. இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதிற்கும் பத்சேபாளுக்கும் பிறந்த இரண்டாவது குமாரனாகிய சாலொமோன் எழுதிய நீதிமொழிகள்.  தாவீது மற்றும் சாலொமோன் இருவரும் தனித்தனியே 40 வருடங்கள் இஸ்ரவேலை ஆண்டனர்.

சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவானபோதுகர்த்தரிடம் இருந்து ஞானத்தையும்அறிவையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.  அது அவருக்குச் செல்வத்தையும்மரியாதையையும்புகழையும் தேடித்தந்தது.

ஞானத்தில்  சிறந்து விளங்கின சாலொமோன் தன் வாழ்வில் அதைப் பயன்படுத்த தவறினார்.  அவரது மகன் ரெகோபெயாமும் எல்லா புத்திமதிகளைப் பெற்றுக் கொண்டாலும், அதை ஞானத்தோடு பயன்படுத்த தவறினான்.  தன் தந்தையின் போதனைகளை நிராகரித்தார்.

 நீதிமொழிகள்:1:11

எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;

முந்தைய வசனத்தில் பாவிகள் என்று துன்மார்க்கரை குறிப்பிடலாம்.  பெற்றோரின்  சொல் கேளாதவர்கள் இவர்கள். தாங்கள் செய்யும் பாவச்செயலுக்கு தங்கள் கூட இருக்கிறவர்களை துணையாக அழைக்கிறார்கள். இரத்தம் சிந்தும் படி பதிவிருப்போம் வா என்று சொல்வதன் மூலம் இவர்கள் கொலை செய்வதற்கு கூடத்  தயங்காதவர்கள் என்று சொல்லலாம். குற்றமில்லாதவர்களைத் துன்புறுத்த பதிவிருக்கிறார்கள்.  ஞானம் இல்லாதவர்களை கவர்ந்திழுக்கிறார்கள்.  அப்படிப்பட்டவர்களின்  வலைக்குள் சிக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். 

Proverbs : 1 : 11

 If They Say, "Come Along With Us; Let's Lie In Wait For Someone's Blood, Let's Waylay Some Harmless Soul;

In the previous verse the wicked are referred to as sinners. These are the ones who do not listen to their parents. They invite even their own companions to the sin they commit. They did not even hesitate to kill others and even their own company. Let's lie in wait for someone's blood- This portion of the verse clearly says that.  They wait to harass innocent people. They attract those who have no wisdom. Let us protect ourselves from falling into the trap of such people.

நீதிமொழிகள் : 1 : 12

பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்;

இந்த வசனம்  துன்மார்க்கர் எவ்வளவு கொடுமையான ஆலோசனையை வழங்குகிறார்கள் என்று கூறுகிறது.   யோசேப்பின் சகோதரர்கள் இப்படிப்பட்ட ஆலோசனையைத் தான் யோசேப்புக்கு விரோதமாக பண்ணினார்கள். குற்றமற்ற யோசேப்புக்கு விரோதமாகக் கொடுமையான செயலைச் செய்ய திட்டம் பண்ணின்னார்கள் - ஆதியாகமம் :37:20.  இப்படி ஆலோசனை கொடுக்கும் நண்பர்கள் கூட்டத்தில் நாம் இருக்க வேண்டாம்.   

Proverbs : 1 : 12

 Let's Swallow Them Alive, Like The Grave, And Whole, Like Those Who Go Down To The Pit;

This verse tells us how cruel counsel the wicked give. This is the kind of counsel that Joseph's brothers used against Joseph. They plotted to commit a cruel act against the innocent Joseph - Genesis: 37:20. We should not be in a crowd of friends giving advice like this.

நீதிமொழிகள் : 1 : 13

விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.

குற்றச்செயல்களை செய்ய அழைத்து அதற்கு ஒரு மேற்பூச்சு பூசுகிறார்கள். விலை உயர்ந்த பொருள்களைப் பெற்றுக்கொள்ளப் போவது போல ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். மேலும் அவர்கள் வீடுகளை கொள்ளைப் பொருள்களால் நிரப்புவோம் என்கிறார்கள்.  பொருளாசையைத் தூண்டுகிறார்கள். அதில் ஈர்க்கப்பட்ட பலர் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து தங்கள் வாழ்நாளில் சரிசெய்ய முடியாத சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.  எனவே அப்படிப்பட்ட நண்பகர்ளின் சகவாசத்தை தெரிந்தெடுக்க வேண்டாம். 

Proverbs : 3 : 13

 We Will Get All Sorts Of Valuable Things And Fill Our Houses With Plunder;

The wicked call their friends to commit crimes and put a coating on it. They create an image as if they are going to get expensive items. And they say we will fill homes with loot. They provoke materialism. Fascinated by it, many chose the wrong path and get into trouble that cannot be corrected in their life time. So let us not choose the company of those people. 

நீதிமொழிகள் : 1 : 14

எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்குமென்று அவர்கள் சொல்வார்களாகில்;

பாவச் செயலைச் செய்வதற்கு பங்காளிகளைத் தெரிந்து கொள்கிறார்கள் பாவிகள்.  எல்லாருக்கும் ஒரே பை இருக்கும் என்றுச் சொல்வதன் மூலம் பொருளை சமமாய்ப் பங்கிட்டு கொள்வோம் என்று முடிவு எடுக்கிறார்கள்.  பாவத்திலும் தீமையிலும் ஈடுபடும் யாரும் மற்ற பாவிகளுடன் நியாயமாகப் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை. ஒரு வேளை குற்றச் செயல்களை செய்யும் தொடக்க நிலைகளில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்,  ஆனால் காலம் செல்லச் செல்ல அந்த செயல்களுக்கு வழிகாட்டுகிறவன் தனக்கென்று அதிகமாக எடுத்துக் கொள்வான்.  அதன் பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டதை, தான் பயன்படுத்தப்பட்டதை  மூடன் உணர்ந்து கொள்வான்.

பாவம் தற்காலிகமாக சில நன்மைகளை விளைவிக்கும் என்றாலும் அது அழிவுக்கும் துன்பத்திற்கும் வழிவகுக்கிறது.  இறுதியில் மரணத்திற்கு நேராய் வழி நடத்தும். 

பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் ரோமர்: 6:23 இல் கூறுகிறது.

இன்றும் நண்பர்கள் சொல்லுகிறார்கள் என்று குற்றச்செயல்களில் மாட்டிக்கொண்டவர்கள் ஏராளம்.  அதனால் வாழ்வைத் தொலைத்த இளைஞர்கள் ஏராளம் உண்டு.

Proverbs :1: 14

Throw In Your Lot With Us, And We Will Share A Common Purse"-

Sinners select their partners to commit sin. They decide to share the item evenly by saying that everyone will have the same bag. No one who engages in sin and evil is going to share righteously with other sinners. Perhaps the initial stages of committing a crime can be shared equally, but over time the one who guides those acts will take more for himself. Only then will the partners will realize that they have been deceived and used. It will eventually lead their way straight to death.

Scripture says in Romans 6:23 that the wages of sin is death.

Even today there are plenty of people caught up in crime by being with their friends. So there are a lot of young people who have lost their lives. So be careful in choosing the friends. 

நீதிமொழிகள : 1 : 15

என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.

சாலொமோன் தன் மகனிடம் இப்படிப்பட்ட சோதனைகளிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்துகிறார். அப்படிப்பட்டத்  தீயவர்கள்  கூட நட்புறவு வேண்டாம், அவர்கள் செல்லும் வழியில் கூட நடக்க வேண்டாம் என்று கூறுகிறார். தீமை செய்பவர்களோடு நாம் எந்த விதத்திலும் தொடர்பு வைத்திருக்க வேண்டாம். தீயவரோடு வழி நடக்க ஆரம்பித்து விட்டால் அதிலிருந்து விலகி வருவது கடினம். எனவே அவர்கள் பாவ செய்ய அழைக்கும் போதே நாம் அந்த அழைப்பை நிராகரிக்க வேண்டும் .  அப்பொழுதுதான் அந்த சோதனையிலிருந்து தப்பிக்க முடியும்.   சாலொமோன் தான் செய்த தவறுகளை தன்  மகன் செய்து விடக் கூடாது என்று இந்த அறிவுரையை தன்  மகனுக்கு வழங்குகிறார். 

இந்த அறிவுரையை பெற்றோர் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

Proverbs:1:15

 My Son, Do Not Go Along With Them, Do Not Set Foot On Their Paths;

Solomon instructs his son to stay away from such trials. He says that we should not be friendly with such evil person and we should not even walk in the path they go. We should not be associated with evildoers in any way. Once you start walking in the path with the evil one it is hard to get away from it. So when they call us to sin we must reject that call. Only then we can escape from that temptation. Solomon gives this advice to his son so that his son will not do the mistakes that he has made.

Each and every parent is responsible to give this advice to their children. 


நீதிமொழிகள் : 1: 16
அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.

தீயவர்களின் நட்புறவு கூடாதென்பதற்கு இந்த வசனம் இன்னும் காரணங்களை சொல்கிறது. 11 முதல் 14-ம் வசனத்தோடு சேர்த்து இந்த வசனத்தையும் எடுத்துக் கொள்ளலாம். தன்னுடைய நண்பர்கள் முதலில் நல்லவர்களாகத் தெரிவார்கள்.  ஆனால் அவர்கள் செய்யும் மறைவான காரியங்கள் அந்த கும்பலில் போய் சேர்ந்து அவர்களோடு நடக்க ஆரம்பித்த பின்னர்தான்  தான் தெரிய வரும்.  அதற்குள்ளாக இவர்களும் சின்ன சின்ன பாவங்களை செய்ய ஆரம்பித்திருப்பார்கள். அது தவறு என்றுத் தெரிந்து வெளியே வர முயற்சி செய்யும் போது அவர்கள் கூட்டாளிகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக வெளியேறவிடாமல் தடுக்கப்படுகிறார்கள்.  அதன் பின்னர் இவர்களும் அவர்களோடு சேர்ந்து பெரிய குற்றச் செயல்களை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். 

எனவே தான் முதல் அழைப்பிலேயே தீயவர்களின் அழைப்பை நிராகரிக்க தெரிய வேண்டும். 

பெரிய பெரிய குற்றச் செயல்களுக்கு என்றல்ல அவரவர் சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல தவறு செய்யும் சூழ்நிலைகள் வரும்.  ஒரு தடவை பொய் சொன்னால் திரும்ப திரும்ப சூழ்நிலைகள் வரும் போது அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு பொய் சொல்வது ஒரு பழக்கமாகவே ஆகிவிடும். எனவே அந்த சூழ்நிலைகளை முதலிலேயே தவிர்ப்பது நல்லது. அதனையே தான் வேதமும்   அறிவுறுத்துகிறது.

Proverbs : 1: 16

For Their Feet Rush Into Sin, They Are Swift To Shed Blood.

This verse gives more reasons why we should not be friends with the wicked. This verse can be taken along with verses 11 to 14. His friends will look good at first. But the secret things they do will only be revealed only after they join the gang and start walking with them. By then, they too would have begun to commit minor sins. When they try to get out knowing it is wrong they are prevented from leaving due to the pressure put on them by their partners. After that, they also start committing major crimes with them.

That is why it is necessary to know how to reject the call of the wicked at first.

Circumstances may come where we may commit small mistakes like telling lies, gosipping etc.  If you do it again and again it will become a habit and you will not feel that it is a sin.  So it is better to avoid those situations at first. That is what the scripture also suggest.                                                                   

                                           

                 நீதிமொழிகள் : 1: 17
எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.
    
    ஒரு பறவை தனக்கு முன்னால் வலை விரிக்கப்பட்டிருக்கிறதைக் கண்டால் அதில் போய் சிக்கிக்கொள்ளாதபடி தப்பித்து பறந்து விடும். பறவையைப் போல புத்திசாலியாக இருக்க அறிவுறுத்தப்படுகிறோம்.  பிறன் ஒருவனை அழிக்க துணிந்து அதற்காக உங்களை அவர்களோடு சேர்த்துக் கொண்ட துன்மார்க்கர் அதேபோல் உங்களையும் ஒரு நாள் அழிக்க துணிந்து விடுவார்கள். 
    
    ஒருவன் மற்றொருவனுக்கு துரோகம் செய்ய நினைத்தால் தன்னோடிருக்கிறவர்களுக்கும் துரோகம் செய்ய துணிவான்.  அப்படிப்பட்டவர்களோடு இருக்கும் போது அவன் மற்றவர்களுக்கு விரிக்கும் வலையைப் பார்த்து நாம் ஒரு நாள் அதில் சிக்கிக்கொண்டு விடாதபடி   தப்பித்துக்கொள்ள சாலமோன் ஞானி சொல்லுகிறார்.

Proverbs : 1: 17

How Useless To Spread A Net In Full View Of All The Birds!

    If a bird sees a net spread in front of it, it will fly away so as not to get caught in it. We are advised to be as smart as a bird. The wicked who dare to destroy another and join you for it will dare to destroy you one day as well.

    If one tries to betray another, he dares to betray those around him. The wise man Solomon tells us to watch the net the evil spreads to others while we are with such people so that we may not fall into it one day.


நீதிமொழிகள் : 1: 18
இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளி வைத்திருக்கிறார்கள்.

    பாவிகள் பிறரை காயப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.  ஆனால் அது அவர்களுக்கே பாதகமா முடியும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.   தங்கள் சுய லாபத்திற்காக பிறரை படுகுழிக்குள் தள்ள முயற்சிப்பவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்குமாறு சாலொமோன் தன் மகனை எச்சரிக்கிறார்.  நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை அபகரித்துக்கொள்ள யேசபேல் செய்த சதியும் அதன் பின்விளைவுகளையும் நினைத்துக் கொள்வோம்(1 ராஜாக்கள்:21).  நாம் பிறருக்கு தீமை செய்ய நினைத்தால், அந்த தீமை நம் மேல் திரும்பும் படி தேவன் செய்வார். அப்படிப்பட்ட செயல்களுக்கு துணை போகும் போது கூட தேவன் அதனை நம் மேல் திருப்பி விடுவார். அது நம்முடைய மரணத்தை நாமே தேடுவதற்கு சமமாகும்.

    ஒரு போதும் பிறருக்கு தீமை செய்ய நினையாதிருங்கள்.

Proverbs : 1: 18
These Men Lie In Wait For Their Own Blood; They Waylay Only Themselves!

    Sinners try to hurt others. But are unaware that it can be detrimental to themselves. Solomon warns his son to beware of those who try to push others into the abyss for their own gain. Consider Jezebel's plot to seize Naboth's vineyard and its aftermath (1 Kings 21). If we want to do evil to others, God will make that evil return to us. God will turn it over to us even when we support such acts. It is the equivalent of seeking our own death.

    Never think of doing harm to others.


நீதிமொழிகள் : 1: 19

பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.

பேராசை தவறான வழிகளை யோசிக்க வைக்கும், அந்த பாதைகளில் அழைத்தும் செல்லும்.  முடிவில் அதை உடையவர்களின் உயிருக்கே பாதகமான அமையும்.  ஆமான் மொர்தெகாயின் உயிரைப் பறிக்க அவனுக்காக தூக்கு மரத்தை செய்வித்தான்.  இறுதியில் தான் வெட்டின குழியில் தானே விழுந்தான் என்ற மொழிக்கேற்ப அதில் ஆமானே தூக்கிலிடப்பட்டான்.

 PROVERBS : 1 : 19
Such Is The End Of All Who Go After Ill-gotten Gain; It Takes Away The Lives Of Those Who Get It.

Greed makes you think the wrong way and takes you down those paths. In the end it will be detrimental to the lives of those who own it.  Haman made the gallows for Mordecai to take his life. But Haman was hanged in the same gallows(Esth 7:8-10).

                              

நீதிமொழிகள் : 1: 20

ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.

இந்த வசனத்தில் ஞானம் ஒரு பெண்ணாக உருவகப்படுத்தப்படுகிறது(She Raises Her Voice In The Public Squares).ஒரு பொதுவான இடத்தில் நின்று கூப்பிடுகிறது. பலர் கூடும் இடத்தில் நின்று சத்தமிடுகிறது.  ஞானம் எல்லாருக்கும் பொதுவானதாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அதைக் கண்டடைகிறவர்கள் வெகு சிலரே. கர்த்தருக்குப் பயப்படுதன் மூலம் ஞானத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

PROVERBS : 1 : 20

Wisdom Calls Aloud In The Street, She Raises Her Voice In The Public Squares;

In this verse Wisdom is simulated as a woman (She Raises Her Voice In The Public Squares). She Stands where many people gather and makes noise. Wisdom is given in common to all. But very few find it. Let us try to gain wisdom by fearing the Lord.


நீதிமொழிகள் : 1 : 21

அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது:

ஞானமானது வெளியேயும், ,வீதிகளிலும் நின்று சத்தமிடுவது மட்டுமல்ல சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும் ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிடுகிறது என்று சொல்லப்படுகிறதுசந்தடியுள்ள தெரு என்பது மக்கள்  திரளாகக்  கூடுகிற இடம். ஒலிமுகவாசல் என்பது பட்டணத்தின் வாசல்/நுழைவாயில். மக்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்ட இடங்களில் நின்று ஒருவர் சத்தமிட்டுப் பேசும்போது அதைக் அங்கு கூடியிருக்கிறவர்கள் தானாகவே கேட்க நேரிடும்ஆனாலும் அதைக் கேட்டுக் காதில் வாங்கிக்கொள்வதும் அதை விட்டு விடுவதும் கேட்கிறவர்களைப் பொறுத்துக் காணப்படுகிறதுபலர் அதை உன்னிப்பாக கவனிக்கலாம்ஆனாலும் அந்த சந்தடி சத்தத்தில் கேட்காமல் போகிறவர்களும் உண்டு.

கர்த்தர் நம் எல்லாருக்கும் ஞானத்தைக் கண்டடையக் கூடிய வாய்ப்பைத் தந்திருக்கிறார்ஆனால் நாம் அதை பெற்றுக் கொள்வதும், ஞானத்தை புறம்பே தள்ளுவதும் நம் கைகளில் தான் உள்ளது. ஏனெனில் கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று வேதம் கூறுகிறது.

Proverbs : 1 : 21

At The Head Of The Noisy Streets She Cries Out, In The Gateways Of The City She Makes Her Speech:

Wisdom is said to stand outside and make noise in the streets, but also to stand and shout in the alleys and gates of busy streets. A busy street is a crowded place. The sound gate is the gateway to the city. People keep coming and going.

When someone stands in such a place and speaks loudly, those present there will automatically hear it. Yet it is up to the hearer to listen to it and leave it as such. Many may notice it meticulously. But there are people who do not listen to the noise.

The Lord has given all of us the opportunity to discover wisdom. But it is in our hands that we receive it or put it aside. Because the scripture says, Ask, and it shall be given you.    

 

நீதிமொழிகள்:1:22

பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எது வரைக்கும் இருக்கும்.      

இவ்வசனத்தில் 3 நபர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.  பேதைகள், நிந்தனைக்காரர், மதியீனர்.

குறைந்த புத்திசாலித்தனம், சோம்பல், மற்றும் அக்கறையின்மை உடையவர் பேதை எனப்படுகின்றனர்.  தங்களால் எதுவும் முடியாது என்ற எண்ணத்தில் எதையும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் இருப்பார்கள்.  புதியதாக ஏதாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள்.   

அடுத்ததாக, நிந்தனைக்காரர் பிறரை நிந்திப்பவர்கள், பிறரை அவமதிப்பவர்கள்.  அடுத்தவர் தங்களுக்கு அறிவுரைச் சொல்வதை விரும்பாதவர்கள்.  அதிகாரத்திற்கு கீழ்படியாதவர்கள்.   

மதியீனர் மேற்குறிப்பிட்டவர்களைப் போல் அல்லாமல் தாங்கள் நினைத்ததை சரி என்று நினைத்து செய்பவர்கள்.  எவ்வளவு தான் ஞானமுள்ள வார்த்தைகள் பாதிக்கப்பட்டாலும் அதை ஏற்க மறுக்கிறார்கள்.  அதனால் தான் ஞானமானது எத்தனை நாட்கள் இப்படி இருப்பீர்கள் என்று கேட்கிறது.  நாம் எந்தக் கூட்டத்தில் இருக்கிறோம். 

கர்த்தரின் வார்த்தை பேதையை  ஞானியாக்குகிறது - சங்கீதம் :19:7.  பேதைமையை விட்டு விலகுவதினால் பிழைத்திருப்போம்-நீதிமொழிகள்:9:6.  நிந்தனை செய்பவரும் கூட அத்தீய செயலை விட்டு விடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  மதியீனரும் தங்கள் மதியீனத்தை விட்டுத் திரும்பி வாழ அழைக்கப்படுகிறார்கள். 

கர்த்தரிடம் ஜெபித்து மன்றாடி ஞானத்தைப் பெற்றுக்கொள்வோம்.  பெற்றோர், போதகர், ஆசிரியர் போன்றோரின் போதனைகளையும் தாழமையுடன் கேட்கப் பழகிக்கொள்வோம்.  அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடப்போம்.  தினம் தினம் ஞானத்தைப் பெற்றுக் கொள்ள ஜெபிப்போம்.

Proverbs:1:22

"How Long Will You Simple Ones Love Your Simple Ways? How Long Will Mockers Delight In Mockery And Fools Hate Knowledge?

3 persons are mentioned in this verse. Simple ones, mockers, fools.

A person who is less intelligent, lazy, and indifferent is called a simple one. They are under the impression that they can do nothing. They will not be interested in learning anything new.

Next, the mocker is the one who mocks and insults others. They don't want to get advise from anybody.  Also, they will not obey the people in authority.   

Fools are not like the ones mentioned above.  They will think that what they thought was right.   They will refuse to accept the words of other people no matter how wise words or thought other people give.  That is why wisdom asks how many days you will be like this.  In which group we are in? 

The word of the LORD turns the simple one into a wise person- Psalm 19: 7. If we leave our simple and mocking ways, we will live— Proverbs 9: 6. Even the blasphemer is advised to abstain from the act of mocking others. Fools are also called to come back from their foolishness.

Let us pray to the Lord and receive wisdom. We also learn to listen humbly to the teachings of parents, teachers, and preachers. We will listen to their advice and walk in the word of God. Let us pray daily for wisdom.


Sunday, March 6, 2022

கண்கள் திறக்கப்பட அழைக்கப்படுகிறோம்

 ஏசாயா : 42: 6

 நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைக் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,

நம்முடைய கண்கள் திறக்கப்பட வேண்டும் என்ற அழைப்பு இப்பொழுது நமக்கு கொடுக்கப்படுகிறது.  இருள் நிறைந்த வாழ்வில் வெளிச்சம் தர நம் தேவன் ஆயத்தமாயிருக்கிறார். அதற்காக நம் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டும்.  கண்கள் என்பது நம் சரீர பிரகாரமான கண்களை அல்ல, நம் ஆவிக்குரிய கண்களைக் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.  கண்கள் திறக்கப்பட்டவரின் வாழ்வில் தேவன் பல நன்மைகளை வைத்திருக்கிறார்.

1)  ஆகாரின் கண்களைத் திறந்த தேவன் ஆதியாகமம் :21:19

தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

ஆதரவற்ற, உதவியற்ற  நிலை. தன் குழந்தைக்கு கொடுக்க தண்ணீரற்ற நிலையில் ஆகார் நின்றிருந்தாள்.  வனாந்தரத்தில் வாய்ப்பற்ற சூழ்நிலையிலும் ஒரு நீரூற்றை தேவன் காண்பித்தார்.   தேவன் ஆகாரின் கண்களைத் திறந்தார். 

ஆண்டவர் நமக்கு உதவி செய்ய ஆயத்தமாயிருக்கிறார்.  ஆண்டவர் நமக்கு நம்முடைய அன்றாட வாழ்வில் செய்யும் உதவிகளை நாம் உணராதிருக்கிறோம்.  ஒவ்வொரு நிமிடமும் நமக்கு பலத்த துருகமும், கேடகமுமாய் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறார்.  

2) பிலேயாமின் கண்களைத் திறந்த தேவன் - எண்ணாகமம் : 24: 3,4 

அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

பிலேயாம் இஸ்ரவேலரை சபிக்கப் புறப்பட்டான். அவனுடைய கண்கள் திறக்கப்பட்ட போது அவன் இஸ்ரவேலரை ஆசீர்வதித்தான்.  கண்கள் திறக்கப்பட்டபின் தேவ எச்சரிப்பைக் கண்டு கொண்டான்.  தவறை உணர்ந்து கொள்ளுகிறான். 

பொருளாசையினால் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க ஒத்துக்கொண்டான்.  வழி தப்பித் போகிற நமக்கு சரியான பாதையை தேவன் காட்டுவார்.  தேவ சித்தத்தை அறிந்து கொள்ளச் செய்வார்.  

3)  வேலைக்காரன் கண்களைத் திறந்த ஆண்டவர் - 2 ராஜாக்கள் :6:17

அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.

எலிசாவை அழிக்கும் படி சீரியாவின் ராஜா ராணுவத்தை அனுப்புகிறான்.  அதனைப் பார்த்து பயந்த எலிசாவின் வேலைக்காரன் நாம் என்ன செய்வோம் என்று சொல்கிறான்.  அப்பொழுது எலிசா தேவை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.  தேவன் அவன் கண்களைத் திறந்தார்.  கண்கள் திறக்கப்பட்ட போது எலிசாவைச் சுற்றி அக்கினி மயமான குதிரைகள், ரதங்கள் சூழ்ந்திருக்கிறதைக் கண்டார்.  

வந்த ராணுவத்திற்கு கண்மயக்கம் உண்டாகும் படி தேவன் செய்தார். நம் கண்கள் திறக்கப்பட்டால் நாம் ஆண்டவரின் பாதுகாப்பை உணர முடியும்.  உன்னதமான பாதுகாவலை நாம் காண முடியும்.  

நம் சரீரக் கண்களால் காணக்கூடியக் காட்சிகள் போலியானதாகவும், மாய்மாலமானதாகவும் காணப்படுகிறது.  நம் ஆவிக்குரிய கண்கள் திறக்க தேவனை நோக்கிக் கெஞ்சுவோம்.  அப்பொழுது தேவன் நம்மை ஒன்றுமில்லாத சூழலில் வழி நடத்திச் செல்வதைக் காண முடியும், தேவனின் எச்சரிப்பை உணர்ந்து கொள்ள முடியும், அவரின் உன்னத பாதுகாப்பின் கீழ் இருப்பதை உணர முடியும்.  

Saturday, August 21, 2021

தண்ணீரைப் போன்ற கர்த்தருடைய வார்த்தை / The word of God like water

    தண்ணீராக உருவகப்படுத்தப்பட்டிருக்கும் கர்த்தருடைய வார்த்தை நம்மை தூய்மைப்படுத்துகிறது.  அது நம்மைத் தூய்மையாக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.  இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தினாலே சுத்தமாயிருக்கிறீர்கள் என்று யோவான் : 15: 3-இல் வாசிக்கிறோம். 

    அழுக்குகள், கறைகள் படிந்த இடங்கள் தண்ணீர் ஊற்றி கழுவும் போது தூய்மையாக்கப்படுகின்றது.  அதே போல கர்த்தருடைய வார்த்தை, நம் இதயங்களில் விதைக்கப்படும் போது, நாம் பாவங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு நாம் தூய்மையாக்கப்படுகிறோம்.   

    கர்த்தருடைய வசனத்தின் படி நம்மைக் காத்துக் கொள்ளும் போது  நாம் செல்லும் வழிகளில் பரிசுத்தமாகக் காக்கப்படுகிறோம் - சங்கீதம் :119:9.  மேலும் கர்த்தருடைய வாக்கை இருதயத்தில் வைத்துக் கொள்ளும் போது கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவம் செய்யாதபடிக்கு காத்துக் கொள்ளப்படுவோம்.  

எபேசியர் :5:26-27 கூறுகிறது, 

தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,

கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

    இவ்வசனங்களில் இயேசு கிறிஸ்து தேவாலயத்தைச் சுத்திகரிக்க நிகழ்வைப் பவுல் நினைவு கூறுகிறார்.  கர்த்தர் சுத்தமான ஜலத்தை தெளிப்பதன் மூலம் அசுத்தங்கள் நீங்கி ஜனங்கள் சுத்தமாக்கப்படுகிறார்கள் என்று எசேக்கியேல் :36:25 கூறுகிறது. 

    யோவான் : 5: 5-9 வரையுள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள்.  முப்பத்தெட்டு வருஷ காலம் வ்யாதிக்கொண்டிருந்த மனிதனை தேவன் தண்ணீருக்குப் பதிலாக தம்முடைய வார்த்தையை அனுப்பி குணமாக்கின நிகழ்வை வாசிக்கிறோம்.  எல்லாரும் குளத்தின் தண்ணீரினால் சுகமாக்கப்பட்டார்கள்.  ஆனால் 38 வருஷ வியாதியஸ்தன் சுகமாக்கப்பட்ட போது கர்த்தருடைய வார்த்தை அங்கு தண்ணீராக செயல் பட்டது. 

    எனவே நாம் தினமும் தண்ணீர் குடிப்பது போல் கடவுளின் வார்த்தையைப் படியுங்கள், இதனால் நமது அசுத்தங்கள் நீங்கி, நம் இதயம், மனம் மற்றும் ஆன்மாவில் தினம் தினம் சுத்தமாக இருக்க முடியும்.

The word of the Lord that is symbolized as water purifies us. It has the power to purify us. We read in John: 15: 3 that you are cleansed by the doctrine of Jesus Christ.

Dirt and stains are cleaned by rinsing with water. Likewise when the word of the Lord is sown in our hearts, we are delivered from sin and we are cleansed.

As we guard ourselves according to the word of the Lord, we are kept holy in the ways we walk - Psalm: 119: 9. And when we keep the word of the Lord in our hearts, we will be kept from sinning against the Lord.

Ephesians: 5: 26-27 says,

 To Make Her Holy, Cleansing Her By The Washing With Water Through The Word,

And To Present Her To Himself As A Radiant Church, Without Stain Or Wrinkle Or Any Other Blemish, But Holy And Blameless.

In these verses Paul recalls the event of the cleansing of the church by Jesus. Ezekiel 36:25 says that the Lord cleanses people by removing uncleanness by sprinkling them with clean water.

 Read verses John: 5: 5-9. We read of the event in which God sent His word instead of water to heal a man who had been sick for thirty-eight years. Everyone was healed by the water of the pool. But when the 38-year-old sick man was healed the word of the Lord acts like water there.

So read the Word of God like we drink water every day so that we can get rid of our impurities and be clean in our heart, mind and soul day by day.

Sunday, August 15, 2021

ஜீவனைக் கொடுக்கும் கர்த்தருடைய வார்த்தை / Word of GOD - Gives life

     தேவனுடைய வார்த்தை ஜீவனைக் கொடுக்கிறது.  வசனங்கள் ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது என்று யோவான்: 6:63 -ம்  சொல்லுகிறது.  ஆதியிலே தேவன் தம்முடைய வார்த்தையினால் வானத்தையும், பூமியையும் அனைத்து ஜீவராசிகளையும் உண்டாக்கினார்.  ஆதியாகமம்:1 -ம் அதிகாரம் இதைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.   தேவனுடைய வார்த்தையினால் உலகங்கள் உண்டாக்கப்பட்டதென்று எபிரேயர் :11: 3- இல் வாசிக்கிறோம்.  அவர் கட்டளையிட்ட போது காற்றும் கடலும் கூட கீழ்ப்படிந்தது.

    அதே வண்ணமாக தேவனுடைய வார்த்தை நமக்கும் ஜீவனைக் கொடுக்கிறது.   நாம் சோர்ந்து போயிருக்கும் வேளைகளில் நம்மை ஊக்கப்படுத்துகிறது. 

    தாவீது தன் வாழ்நாளில் பல சவால்களை சந்தித்தார். பல துன்பங்களைச் சகித்தார்.  தாவீது கர்த்தர் தெரிந்து ஒரு ராஜாவாக மாறுவதற்கு, பல சவால்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது.  

    ஆனாலும் கர்த்தரின் வார்த்தைகள் அவரை உற்சாகமூட்டிக் கொண்டே இருந்தன.  கர்த்தரை தினமும் துதிப்பதாலும், அவர் வார்த்தைகளை தியானித்ததாலும் வாழ்வில் இடறல்கள், துன்பங்கள் வந்த போதும் விழுந்து விடாமல் முன்னேறிச் செல்வதற்கு கர்த்தர் துணையாய் இருந்தார்.  அந்த வார்த்தைகள் அவருக்கு ஜீவனைக் கொடுத்தது. எனவே கர்த்தரின் வார்த்தைகளை தியானியுங்கள். தினம் தினம் புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்வீர்கள். 

கர்த்தருடைய வார்த்தை நமக்கு கொடுக்கப்பட்டதின் நோக்கம் என்ன?


-----------------------------------------------------------------------------------------------------------------------------

    The Word of God gives life. John 6:63 says that "The words I have spoken to you—they are full of the Spirit and life."  In the beginning God created the heavens and the earth and all living things by HIS word.  Genesis chapter 1 makes this clear.  We read in Hebrews: 11: 3 that "By Faith We Understand That The Universe Was Formed At God's Command.....".  Even the wind and the sea obeyed to God's command.  

    In the same way the Word of God gives us life. It encourages us when we are tired.

    David faced many challenges in his lifetime. He endured many hardships. David had to face many challenges in order to know the Lord and to become the  king.

    Yet the words of the Lord continued to encourage him. David praised the Lord and meditate on His words daily without fail. So the Lord helped David to move forward in the face of adversity and suffering. Those words gave him life. So meditate on the words of the Lord. You will get new life day by day.

Purpose of God's Word