Sunday, August 1, 2021

கர்த்தருடைய வார்த்தை நமக்கு கொடுக்கப்பட்டதின் நோக்கம் என்ன? /Purpose of the God's Word

கர்த்தருடைய வார்த்தை நமக்கு கொடுக்கப்பட்டதின் நோக்கம் என்ன? 

1 பேதுரு 1 :3,4 இன் படி 

  • நம்மைப்  படைத்த தேவனைப்  பற்றி அறிந்து கொள்வதற்கும்,
  •  ஜீவனுக்கும் தெய்வ பக்திக்கும் வேண்டிய யாவற்றையும் பெற்றுக் கொள்வதற்கும்,
  •  இச்சையினால் உலகத்தில் உண்டான கேட்டுக்கு  தப்பிப்பதற்கும், 
  • திவ்ய சுபாவத்திற்கு பங்குள்ளவர்கள் ஆகும்படிக்கும் 

தேவன் மேன்மையான மற்றும் அருமையான வாக்குத்தத்தங்களை வேதத்தின் மூலம் நமக்கு தந்தருளி இருக்கிறார். 

2 தீமோத்தேயு:3:15,16 இன் படி 
  • வேத புத்தகம் நம்மை இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலம் இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்குகிறது.
  • நமக்குத் தேவையான உபதேசத்தை வழங்குகிறது.
  • தேவையான நேரத்தில் நம்மை கடிந்து கொள்கிறது.
  • நம்மை சீர்திருத்துகிறது.
  • நமக்கு நீதியைப் படிப்பிக்கிறது.  
இவ்வாறாக வேதம் பல விதங்களில் நமக்கு ப்ரயோஜனமாயிருக்கிறது.

வேதப் புத்தகம் ஒரு சாதாரணப் புத்தகம் அல்ல.  நம் வாழ்வில் பிரச்சனைகள் வரும் போது நாம் பல இடங்களில் இருந்தும், நமக்கு பிரியமானவர்களிடத்திலும் இருந்தும் உதவியோ, அந்தப் பிரச்சனைக்குத் தீர்வையோ எதிர்பார்ப்போம்.  ஆனால் பிரச்சனைகள் வரும் போது நாம் முதன் முதலாக திரும்பிப் பார்க்க  வேண்டியது , நம்மைப் படைத்த தேவனையும், அவர் வேதத்தின் மூலம் நமக்கு அருளிய வார்த்தைகளையுமே.  வேதத்தின் தொடக்கத்தில் இருந்தே கர்த்தர் நம் மேல் வைத்திருக்கும் அன்பும், அக்கறையும் சொல்லப்படுகிறது. 

அவர்  வாக்குத்தத்தங்களை நமக்குத் தந்தருளினது  மட்டுமன்றி அதை நிறைவேற்ற அவர் எவ்வளவு வல்லமையுள்ளவர் என்பதையும் பல தருணங்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.  நம் வாழ்வில் எப்பேர்ப்பட்ட சூழ்நிலைக்கும் தேவையான உதவி வேதத்திலிருந்து நமக்கு .கிடைக்கும்.  எனவே, அருளிய  வேதத்தை வாசித்து, 
  •  ஒரே மெய் தேவனை  கொள்வோம்.
  • இரட்சிப்பை இலவசமாகப்   பெற்றுக் கொள்வோம்.
  • தேவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம்.
  • முடிந்த வரை தேவனைப் பற்றி  அறிவித்து சாட்சியாக வாழ்வோம்.   கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். 

No comments:

Post a Comment