Wednesday, July 28, 2021

நம் மேல் அன்பான தேவன் நமக்கு உண்டு/We have a loving God

    ( Scroll down for English)

உலகில் அதிகமான பேரால் விரும்பி வாசிக்கப்படும் புத்தகம் வேத புத்தகம்.  அது பல நபர்களால் தேவ ஆவியினால் உந்தப்பட்டு எழுதப்பட்டது. 2 தீமோத்தேயு:3:16 -இல் அது தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

    உலகில் அதிகமாக விற்கப்படும் புத்தகமும் அதுவே.  மேலும் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட புத்தகமும் அதுவே. எபிரேயு, அரமேயம், கிரேக்கு ஆகிய மூன்று பாஷைகளில் முதல் முதலில் எழுதப்பட்டாலும் பல தேவப்பிள்ளைகளால் கர்த்தருடைய வார்த்தைகளையும், திட்டங்களையும் அனைவரும் தெரிந்து கொள்ளும்படி பல தேவ பிள்ளைகளால் மொழிபெயர்க்கப்பட்டு நம் அனைவர் கரங்களிலும் இன்று வேத புத்தகம் இருக்கிறது.  66 சிறு சிறு புத்தகங்களாக தொகுக்கப்பட்டு இருந்தாலும் மைய கருத்து ஒன்றே. மனித குலத்தை மீட்பதற்காக வந்த அன்பான தேவனின் திட்டமே.

    வேத புத்தகம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது.  பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் இருக்கிறது. 

    பழைய ஏற்பாட்டில் தேவன் மனு உரு எடுத்து யேசுவாக இவ்வுலகில் வந்ததற்கு முன் உள்ள தேவனுடைய செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளது.  

    புதிய ஏற்பாட்டில் யேசுவானவரின் பிறப்பு, வாழ்வு, ஊழியம்,  மரணம், உயிர்ப்பு, பரமேறுதல் போன்றவை சொல்லப்பட்டுள்ளது.  அதன் பின் அவருடைய சீஷர்களின் ஊழியம் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.  சீஷர்கள் சபைகளைக் கட்டி எழுப்பின விதங்கள் நிரூபங்களாக புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. 

    வேதத்தை வாசிப்பது ஒரு கிறிஸ்தவனின் தலையாயக் கடமையாகும்.  அது தேவனுக்கும் தனக்குமான உறவை மேம்படுத்துகிறது.  வேதத்தை வாசிப்பதன் மூலம் தேவனைப் பற்றியும், அவருடைய வாக்குத்தத்தங்கள், திட்டங்கள் பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடியும்.  தேவன் தந்திருக்கும் மிகப்பெரிய வாக்குத்தத்தம் யோவான்:3:16-இல் சொல்லப்பட்டுள்ளது. 

  • தேவன் நம் மேல் அன்பாய் இருக்கிறார்.
  • தம் ஒரே பேறான குமாரனை நமக்காகத் தந்தருளி இருக்கிறார்.  
  • நித்திய ஜீவனை நமக்கு வாக்குப்பண்ணி இருக்கிறார். 
    எனவே வேதத்தை வாசிப்போம், தேவனை விசுவாசிப்போம், நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வோம்.

The most loved and read book in the world is "The BIBLE". It was written by many people driven by the Spirit of God. It is clearly stated in 2 Timothy 3:16.

It is also the best-selling book in the world. It is also the most widely translated book. Although originally written in three languages, Hebrew, Aramic, and Greek, the Scriptures have been translated by many children of God so that the words and plans of the Lord may be known to all. Although compiled into 66 small books, the central idea is the same. It is the plan of the loving God who came to redeem mankind.

The Bible is divided into the Old Testament and the New Testament. There are 39 books in the Old Testament and 27 books in the New Testament.

The Old Testament describes the activities of God before Jesus came into the world as the son of God.

The New Testament tells of the birth, life, ministry, death, resurrection, and ascension of Jesus. It then tells of the ministry of his disciples. The New Testament provides evidence of the disciples' building up church.

Reading scripture is the chief duty of a Christian. It improves the relationship between God and himself/herself. By reading Scripture we can learn about God and His promises and plans. The greatest promise God has made is in John 3:16.
  • God is loving  us.
  • He has given his only begotten Son for us.
  • He has promised us eternal life.
     So let us read the scriptures, believe in God, and receive eternal life.