Saturday, August 21, 2021

தண்ணீரைப் போன்ற கர்த்தருடைய வார்த்தை / The word of God like water

    தண்ணீராக உருவகப்படுத்தப்பட்டிருக்கும் கர்த்தருடைய வார்த்தை நம்மை தூய்மைப்படுத்துகிறது.  அது நம்மைத் தூய்மையாக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.  இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தினாலே சுத்தமாயிருக்கிறீர்கள் என்று யோவான் : 15: 3-இல் வாசிக்கிறோம். 

    அழுக்குகள், கறைகள் படிந்த இடங்கள் தண்ணீர் ஊற்றி கழுவும் போது தூய்மையாக்கப்படுகின்றது.  அதே போல கர்த்தருடைய வார்த்தை, நம் இதயங்களில் விதைக்கப்படும் போது, நாம் பாவங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு நாம் தூய்மையாக்கப்படுகிறோம்.   

    கர்த்தருடைய வசனத்தின் படி நம்மைக் காத்துக் கொள்ளும் போது  நாம் செல்லும் வழிகளில் பரிசுத்தமாகக் காக்கப்படுகிறோம் - சங்கீதம் :119:9.  மேலும் கர்த்தருடைய வாக்கை இருதயத்தில் வைத்துக் கொள்ளும் போது கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவம் செய்யாதபடிக்கு காத்துக் கொள்ளப்படுவோம்.  

எபேசியர் :5:26-27 கூறுகிறது, 

தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,

கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

    இவ்வசனங்களில் இயேசு கிறிஸ்து தேவாலயத்தைச் சுத்திகரிக்க நிகழ்வைப் பவுல் நினைவு கூறுகிறார்.  கர்த்தர் சுத்தமான ஜலத்தை தெளிப்பதன் மூலம் அசுத்தங்கள் நீங்கி ஜனங்கள் சுத்தமாக்கப்படுகிறார்கள் என்று எசேக்கியேல் :36:25 கூறுகிறது. 

    யோவான் : 5: 5-9 வரையுள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள்.  முப்பத்தெட்டு வருஷ காலம் வ்யாதிக்கொண்டிருந்த மனிதனை தேவன் தண்ணீருக்குப் பதிலாக தம்முடைய வார்த்தையை அனுப்பி குணமாக்கின நிகழ்வை வாசிக்கிறோம்.  எல்லாரும் குளத்தின் தண்ணீரினால் சுகமாக்கப்பட்டார்கள்.  ஆனால் 38 வருஷ வியாதியஸ்தன் சுகமாக்கப்பட்ட போது கர்த்தருடைய வார்த்தை அங்கு தண்ணீராக செயல் பட்டது. 

    எனவே நாம் தினமும் தண்ணீர் குடிப்பது போல் கடவுளின் வார்த்தையைப் படியுங்கள், இதனால் நமது அசுத்தங்கள் நீங்கி, நம் இதயம், மனம் மற்றும் ஆன்மாவில் தினம் தினம் சுத்தமாக இருக்க முடியும்.

The word of the Lord that is symbolized as water purifies us. It has the power to purify us. We read in John: 15: 3 that you are cleansed by the doctrine of Jesus Christ.

Dirt and stains are cleaned by rinsing with water. Likewise when the word of the Lord is sown in our hearts, we are delivered from sin and we are cleansed.

As we guard ourselves according to the word of the Lord, we are kept holy in the ways we walk - Psalm: 119: 9. And when we keep the word of the Lord in our hearts, we will be kept from sinning against the Lord.

Ephesians: 5: 26-27 says,

 To Make Her Holy, Cleansing Her By The Washing With Water Through The Word,

And To Present Her To Himself As A Radiant Church, Without Stain Or Wrinkle Or Any Other Blemish, But Holy And Blameless.

In these verses Paul recalls the event of the cleansing of the church by Jesus. Ezekiel 36:25 says that the Lord cleanses people by removing uncleanness by sprinkling them with clean water.

 Read verses John: 5: 5-9. We read of the event in which God sent His word instead of water to heal a man who had been sick for thirty-eight years. Everyone was healed by the water of the pool. But when the 38-year-old sick man was healed the word of the Lord acts like water there.

So read the Word of God like we drink water every day so that we can get rid of our impurities and be clean in our heart, mind and soul day by day.

No comments:

Post a Comment