நீதிமொழிகள்:1:5
புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;
புத்திமான் நீதிமொழிகளைக் கேட்கிறான். கேட்கிறதற்கு விரைவாக இருக்கிறான். அதன் மூலம் அறிவைப் பெற்றுத் தேறுகிறான்.
விவேகமுள்ள மனிதன் வயது முதிர்ந்த அனுபவசாலிகளிடம் ஆலோசனைப் பெற விரும்புவான். நல்ல ஆலோசனைகளை பெறுவதன் மூலம் பல தவறுகளில் சிக்காமல் இருக்க முடியும். ஞானமாய் சரியானதைத் தெரிந்தெடுத்தக்க முடியும். கர்த்தரை நம்புகிறவர்களுக்கு நல்லாலோசனைகளைக் கொடுப்பதற்குக் கூட ஞானம் கொடுக்கப்படும்.
சங்கீதம்:119:98
நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு, என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.
No comments:
Post a Comment