நீதிமொழிகள்:1:4
இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.
நீதிமொழிகள் புத்தகத்தை எழுத கர்த்தர் சாலொமோனை ஊக்கப்படுத்தினத்திற்கு இன்னொரு காரணம் இந்த வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் அனைவரும் அறிவில் குறைந்தவர்களாகப் பிறந்தவர்களே. அப்படிப்பட்ட அறிவில் குறைந்தவர்களுக்கு ஞானத்தைக் கற்பிப்பதற்கு நீதிமொழிகள் புத்தகம் அருளப்பட்டிருக்கிறது.
பேதைகள் என்பது அறிவில் எளியவர்களைக் குறிக்கிறது. இவர்களுக்கும் நீதிமொழிகள் விவேகத்தைக் கொடுக்கிறது. உள்ளொன்று வைத்து புறம்பே வேறு ஒன்றைப் பேசத்தெரியாதவர்களுக்குக் கூட விவேகத்தைக் கொடுக்கிறது.
அடுத்ததாக இளைஞர்களுக்கு அறிவும் விவேகமும் நீதிமொழிகள் வாயிலாகக் கிடைக்கிறது. ஒரு தவறு செய்ய முற்படும் பொது சிந்தித்து செயல்படுவது விவேகமாகக் கருதப்படுகிறது, அச்சூழல்களில் சிந்தித்து பொறுப்பான, அறிவார்ந்த முடிவை ஞானமாய் எடுக்க உதவுகிறது.
உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
No comments:
Post a Comment