நீதிமொழிகள்:1:9
அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
பெற்றோரின்
புத்திமதிகளையும் போதகத்தையும் கேட்டு நடக்கும் பிள்ளைகளின் வாழ்வு அலங்காரமாய்
காணப்படும். தலையில் வைக்கப்படும் கிரீடத்தை போலவும் கழுத்தில் அணியப்படும்
ஆபரணங்களை போலும் வாழ்க்கை அழகாக இருக்கும்.
ஒரு
குழந்தைக்கு பெற்றோரால் கொடுக்கப்படும் நல்லொழுக்கப் போதனைகளைப் போன்ற மிகப் பெரிய
சொத்து வேறொன்றுமில்லை. அதனை
சுதந்தரித்துக் கொண்டு வாழ்வில் நடைமுறைப்படுத்தி வாழ்வது பிள்ளைகள்
பெற்றோருக்குச் கொடுக்கும் மிகப்பெரிய சந்தோஷம்.
3 யோவான் 4-ம் வசனம் சொல்லுகிறது "என்
பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும்
அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை." எனவே பெற்றோம் பணம் சம்பாதித்துக் கொடுப்பதைக்
காட்டிலும் சந்தோஷத்தைக் கொடுப்பதே சிறந்தது.
Proverbs : 1: 9
For they will be graceful ornaments on your head, And chains about your neck.
The lives of children who listen to their parents' advice and teachings can be seen as decorative. Life is as beautiful as a crown placed on the head and ornaments worn around the neck.
There is no greater asset than the moral teachings given by a parent to a child. Being independent and living life to the fullest is the greatest joy that children can bring to their parents.
The verse 4 in the third epistle of John says, "I have no greater joy than to hear that my children walk in the truth." So it is better to give happiness than to earn money.
Previous Verse / Next Verse
No comments:
Post a Comment