எஸ்தரின் புத்தகத்தை எழுதியது யார்? இது தெளிவற்றதாய் காணப்படுகிறது. எஸ்தர் 9 : 29 - ம் வசனத்தை பார்க்கும் போது மொர்தெகாய் இந்த புத்தகத்தை எழுதியிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. எஸ்தர் 4 : 14 -ம் வசனத்தை வாசித்து பாருங்கள்.
நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.
எஸ்தர் வேத புத்தகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க புத்தகம். ஏனென்றால் கர்த்தருடைய பெயரே அந்த புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தேவனை அறியாத அந்த அரசனைக் குறித்து 192 இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
எஸ்தரோ மொர்தெகாயோ ஜெபித்த ஜெபம் குறிப்பிடப்படவில்லை. எஸ்தரின் புத்தகத்தை புதிய ஏற்பாட்டில் யாரும் எடுத்தாளவில்லை. சாதாரணமாக கூட எஸ்தரின் சரித்திரத்தைக் குறித்து யாரும் சொல்லவில்லை. இது வினோதமான ஒரு புத்தகமாய் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திலே முழு உலகத்தையும் ஆண்ட அரசவையில் நடைபெற்ற காரியங்களையும் இங்கே நாம் பார்க்கிறோம்.
மற்றுமொரு காரணத்தினாலேயும் இது வழக்கத்திற்கு மாறான ஒரு புத்தகமாய் இருக்கிறது. ஒரு பெண்ணின் பெயராலேயே இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. வேத புத்தகத்தில் இரண்டே இரண்டு புத்தகங்கள் தான் பெண்களின் பெயரைக் கொண்டதாக இருக்கிறது. ரூத் மற்றும் எஸ்தர். ரூத்தின் புத்தகத்தில் மீட்பைக் குறித்து வாசிக்கிறோம். அது அன்பின் அடிப்படையிலான சரித்திரம். தேவன் நம்மை முதலாவது நேசித்தபடியினாலே நாம் அவரை நேசிக்கிறோம். அவர் நம்மை நேசித்த படியினாலே தம்மையே நமக்காக தியாக பலியாகக் கொடுத்தார்.
எஸ்தரின் புத்தகத்திலே தேவனுடைய பாதுகாவலைக் குறித்து நாம் படிக்கிறோம். தேவனுடைய அருளைக் குறித்து நாம் பார்க்கிறோம். உபாகமப் புத்தகத்திலே இஸ்ரவேல் ஜனங்களை வாக்குத்தத்த பூமிக்குள் கொண்டு வரும் முன்பதாக அவர்களுடைய சரித்திரத்தைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார். பாபிலோனின் சிறையிருப்பைக் குறித்துச் சொன்னார். எருசலேமை ரோம சாம்ராஜ்யம் அழிக்கும் என்றும் சொன்னார். அது கூறியது போலவே நடைபெற்றது.
அதே வேளையிலே உபாகமம் 31 : 18 -ம் வசனத்தில் தேவன் சொல்லும் பொழுது
அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளினிமித்தமும் நான் அந்நாளிலே என் முகத்தை மறைக்கவே மறைப்பேன்.
என்று சொன்னார். எஸ்தரின் புத்தகத்தில் நாம் பார்க்கும் பொழுதும் தேவன் தம் முகத்தை அவர்களுக்கு மறைத்திருந்தார். என்றாலும் மறைவான நிழலிலே நின்று அவர்களுக்கு அருளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
எனவே எஸ்தரின் புத்தகத்தில் தேவனுடைய சித்தத்திற்கு வெளியே அவருடைய ஜனங்களை நாம் பார்க்கிறோம். பாபிலோனிய சிறையிருப்பிலே எழுபது ஆண்டுகள் அவர்கள் இருந்த காலத்திலே கோரேஸ் ராஜா ஒரு கட்டளை கொடுத்தான். இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தேசத்திற்கு திரும்பி போகலாம் என்றான். அந்நாட்களில் எல்லாரும் திரும்பிச் செல்லவில்லை. அறுபதாயிரத்திற்கும் குறைவான ஜனங்களே திரும்பிச் சென்றார்கள். இதைக் குறித்து எஸ்ரா, நெகேமியா புத்தகங்களில் நாம் படிக்கலாம்.
மேலும் ஆகாய், சகரியா புத்தகங்களிலேயும் அவர்கள் திரும்பி வந்த காலத்தைக் குறித்து நாம் பார்க்கிறோம். அப்படியென்றால் இஸ்ரவேல் தேசத்திற்கு திரும்பாத ஜனக்கூட்டத்தைக் குறித்து என்ன கூறலாம். இன்றைக்கும் கூட இஸ்ரவேல் தேசத்திற்கு திரும்பாத எண்ணற்ற யூதர்கள் உலகத்தின் பல பகுதிகளிலே சிதறி இருக்கிறார்கள். அன்றும் கோரேஸ் ராஜா கட்டளை கொடுத்தாலும் பலர் திரும்பிச் செல்லவில்லை. அன்றைக்கு அவர்கள் திரும்பிச் சென்றிருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதே கர்த்தருடைய சித்தம். அதையே அவர் கட்டளை இட்டார்.
எனவே இப்பொழுது திரும்பிச் செல்லாதவர்கள் கர்த்தருடைய சித்தத்தின் மையத்திலே இல்லை. இப்படி திரும்பி செல்லாத மக்களைக் குறித்து சரித்திரத்திலே நாம் பார்க்க முடியுமா என்றால் அதுதான் எஸ்தரின் புத்தகம். திரும்பிச் செல்லாத மக்களின் வரலாற்றில் இருந்து ஒரு பக்கத்தை தான் நாம் பார்க்கிறோம். எனவே இந்த காரணத்தினாலே எஸ்தரின் புத்தகம் ஒரு முக்கியமான புத்தகமாக காணப்படுகிறது. இந்த புத்தகத்திலே கர்த்தரை புதிய ஒரு வகையிலே நாம் பார்க்கிறோம். அந்த யூத ஜனங்கள் அந்த காலகட்டத்திலே கர்த்தருடைய சித்தத்தின் மையத்திற்குள் இல்லாவிட்டாலும் தேவன் தம்முடைய அருளை அவர்களுக்கு கொடுப்பதை நாம் பார்க்கிறோம்.
அதுதான் தேவனுடைய கிருபை. அவர் தம்முடைய ஜனங்களுக்கு பாதுகாவல் கொடுக்கிறார். பராமரிப்பு கொடுக்கிறார். பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு சத்தியத்தை நாம் பார்க்கிறோம். மீட்பைக் குறித்து யாத்திராகமம் புத்தகத்திலேயும், மீட்பில் அடங்கி இருக்கிற அன்பை குறித்து ரூத்தின் சரித்திரத்திலேயும், மனம் திரும்புதலைக் குறித்து யோபின் புத்தகத்திலேயும், உயிர்த்தெழுதலைக் குறித்து யோனாவின் புத்தகத்திலேயும் கற்றுக் கொள்கிறோம். இப்பொழுது எஸ்தரின் புத்தகம் தேவனுடைய அருளை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.
இந்த யூத ஜனங்கள் அந்நிய தேசத்திலே இருக்கிறார்கள். தேவனுடைய சித்தத்திற்கு வெளியே இருக்கிறார்கள். தங்களுடைய தேசத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற கட்டளையை உதாசீனப்படுத்தி அங்கேயே தங்கி இருக்கிறார்கள். அவர்கள் கீழ்படியாமல் இருந்தவர்கள். அவர்கள் தேவனை மறந்து போனார்கள். அவரை விட்டு தூரமாய் இருந்தார்கள். பிரச்சனைகள் வந்தபோது கர்த்தரை நோக்கி அவர்கள் கூப்பிடவில்லை. முதல் முறையாக அவர்கள் சிறைபிடிப்பிற்குள்ளாக வந்தபோது கர்த்தரின் பாடல்களை எப்படி இந்த அந்நிய தேசத்திலே பாடுவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களால் பாட முடியவில்லை.
சீயோனை நினைத்து அழுது கொண்டு இருந்தார்கள். இப்பொழுது சீயோனை மறந்து விட்டார்கள். உண்மையைச் சொல்லப் போனால் சீயோன் இடிபாடுகளுக்குள் இருந்தது. அவர்கள் திரும்பிச் செல்ல விருப்பம் இல்லாதவர்களாய் இருந்தார்கள். ஆரம்பத்திலே அவர்கள் ஒரு உடன்படிக்கை செய்திருந்தார்கள்.
சங்கீதம் 137 : 6
நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.
இப்பொழுது அவர்கள் கர்த்தரை துதிக்கிறதில்லை. அவரிடத்தில் ஜெபிக்கிறதில்லை. எனவே இந்த எஸ்தரின் புஸ்தகம் ஒரு குறிப்பிடத்தக்க புத்தகமாய் இருக்கிறது. ஆனால் தேவன் என்ன செய்தார். அவர்களை மறந்து போகவில்லை. அது போலவே இதனை வாசிக்கிறவர்களே நீங்கள் தேவனை மறந்து போன காலங்களிலும் அவர் உங்களை நினைத்து கொண்டேதான் இருந்தார்.
அவர்கள் அவரை புறக்கணித்து விட்டால் பின்னர் எப்படி தேவன் அவர்களை வழி நடத்த முடியும். அது தான் அவரின் அருளின் கரம் செய்வது. தேவனுடைய அருளையும் பராமரிப்பையும் எஸ்தரின் புஸ்தகம் கற்றுக்கொடுக்கிறது. தேவன் எல்லாவற்றையும் பராமரிக்கிறவராயிருக்கிறார். மனுக்குலத்திற்கு அவர் அருள் மிகவும் முக்கியமானது. மிருக ஜீவன்களையும் அவர் பராமரிக்கிறார். காணக்கூடியவைகளையும் காணக்கூடாதவைகளையும் அவர் பராமரிக்கிறார். சிறந்த நோக்கத்திற்காக நன்மையையும் தீமையையும் அவர் பராமரிக்கிறார். இதன் பொருள் என்ன? இறுதியிலே அவருடைய சித்தமே நிறைவேறும்.
சங்கீதம் 103:19 ஐ வாசியுங்கள்.
கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.
மேலும் எபேசியர் 1:11 இல் பவுல் சொல்வதை வாசித்துப் பாருங்கள்
மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,
பிரியமானவர்களே, நம்முடைய தேவனே இந்த உலகத்தை ஆளுகை செய்கிறார். அவருடைய கரத்திலிருந்து கை நழுவிப்போய்விட்டது என்று சிலர் சொன்னாலும், அவரே எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டிற்குள்ளே வைத்திருக்கிறார். தேவனுடைய பராமரிப்பைக் குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்த உலகத்தைக் குறித்த மூன்று வார்த்தைகளை நாம் மனதிலே வைத்திருக்க வேண்டும்.
சிருஷ்டிப்பு என்று சொல்லும் பொழுது தமது வார்த்தையினாலே தேவன் இந்த அண்ட சராசரங்களைப் படைத்தார் என்பதை நாம் புரிந்து கொள்ளுகிறோம். சிலர் இந்த அண்ட சராசரங்களும் தானாய் உண்டானது என்று சொல்லுவார்கள். உலகம் உண்டானதைக் குறித்து ஓன்று யூகமாகச் சொல்லலாம் அல்லது வெளிப்படுத்தப்படலாம். தேவன் வெளிப்படுத்தின காரியங்களை விசுவாசத்தினாலே நாம் அறிந்து கொள்ளுகிறோம். தேவனே இந்த உலகத்தினை உண்டாக்கியவர். அந்த விசுவாசம் எப்படி வருகின்றது? விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் என்று ரோமர் 10:17 இல் வாசிக்கிறோம். ஓன்று நீங்கள் சிருஷ்டிப்பை நம்ப வேண்டும். அல்லது உங்கள் யூகத்தை நீங்கள் நம்ப வேண்டும். இந்த உலகத்தைக் குறித்து மூன்றாவது ஒரு விளக்கம் கிடையாது.
இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.
இந்த உலகத்தை தாங்கி கொண்டிருப்பது எப்படி? ஒரு கடிகாரம் ஓடுவது போல தொடர்ந்து எல்லாம் அந்தந்த கால கட்டத்திலே நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்றால் அது எவ்வாறு நடை பெறுகிறது? சரியாக அது ஓடிக்கொண்டிருப்பதினால் தான் மனிதன் ஆகாய மண்டலத்திலுள்ள மற்ற கிரஹங்களுக்கு ராக்கெற்றுகளை அனுப்ப முடிகிறது. ஒரு கடிகாரத்தை போல மிகச் சரியாக அத்தனையும் சுழன்று கொண்டு இருக்கிறது. யார் இதை ஓடச் செய்வது? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே அதை செய்கிறார். அவர் வார்த்தையின் வல்லமையினால் அனைத்தையும் அவர் தாங்கி நடத்துகிறார்.
3 . தேவனுடைய அருள்
மூன்றாவதாக நாம் சிந்திக்க வேண்டிய வார்த்தை தேவனுடைய அருள். இந்த வார்த்தையைத் தான் எஸ்தர் புத்தகத்தில் நாம் கவனிக்கப் போகிறோம். இதே வகையாகத்தான் இந்த அண்ட சராசரங்களையும் தேவன் பராமரிக்கிறார். அடுத்த நாளைக்குள்ளே அதைக் கடந்து செல்ல செய்கிறார். கர்த்தரே அதை எப்பொழுதும் பார்த்துக் கொள்ளுகிறவராய் இருக்கிறார். மோரியா மலையின் மேலே ஆபிரஹாம் நின்ற பொழுது ஆபிரகாமும் ஈசாக்கும் பலியைக் குறித்து எண்ணிய பொழுது பலிக்கான ஆட்டைத் தவிர வேறு எல்லாம் இருந்தது. நடந்தது என்ன?
ஆதியாகமம் 22 : 7 , 8
ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் அதே மலையின் முகட்டிலே எருசலேமிற்கு வெளியே தேவன் ஒரு ஆட்டுக்கடாவைக் கொடுத்தார். கொல்கொதா மலையிலே இயேசு கிறிஸ்து சிலுவையிலே அடிக்கப்பட்டார். நமக்காக கொடுக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி தான் அவர். யோவான் ஸ்நானகன் யேசுவைக் குறித்துச் சொல்லும்போது "இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி " என்றார். தேவனே நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப கொடுக்கிறவராய் இருக்கிறார். எந்தெந்த கால கட்டங்களிலே எதைக் கொடுத்து நம்மை பராமரிக்க வேண்டுமோ, அதைக் கொடுத்து நம்மைப் பராமரிக்கிறவராக தேவன் இருக்கிறார்.
இவ்வாறு செய்யும் பொழுது மனித நிகழ்ச்சிகளிலேயே தேவனுடைய கரத்தை நாம் காணக் கூடியவர்களாக இருக்கிறோம். ஓட்டிச்செல்லும் வாகனத்தின் முன் பகுதியிலே அவரைக் காணவில்லை என்றால் பின் பக்கத்திலே அவர் அமர்ந்திருக்கிறார். எங்கே செல்ல வேண்டும் எங்கே திரும்ப வேண்டும் என்பதை அவரே கூறுகிறார்.
தேவனே வழிநடத்துகிறவராய் இருக்கிறார். ஒரு சிறு குழந்தையின் அழுகுரலையும் பார்வோனின் மகளின் இருதயத்தையும் அந்த நைல் நதியிலே ஒன்றாக்கியவர் நம் தேவன். பார்வோனின் மகள் குழந்தை மோசேயை தூக்கும்படியாக, குழந்தை மோசேயைக் கிள்ளிவிட்டவர் அவர் என்று சொல்லலாம். அந்த அழுகுரல் இளவரசியின் நெஞ்சைத் தொட்டது. இதை பயன்படுத்தி தமது ஜனங்களின் முடிவை அவர் மாற்றினார். அது தான் கர்த்தர் பார்த்துக் கொள்வது. அது தான் கர்த்தருடைய அருள்.
எஸ்தரின் புத்தகத்தில் தேவனின் செயல்பாட்டை மிகத் தெளிவாக நாம் காணலாம். அவருடைய பெயர் இந்த புத்தகத்திலே காணப்படாவிட்டாலும் அவருடைய செயல்பாடுகளை இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலேயும் நாம் பார்க்க முடியும்.