அமைதியின்மை பெருகிக்கொண்டிருக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகில் காணப்படும் பெருந்தொற்று பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து தனிமனித வாழ்வை சிதறடித்து வருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கான உயிர்கள் கொரோனாவிற்கு பலியாகிக்கொண்டிருக்கின்றன. இதனால் பல குடும்பங்கள் சமாதானமிழந்து துயரத்தில் இருக்கின்றன.
இந்த அமைதியின்மைக்கு மத்தியில் யேசுநாதர் தம் சீஷர்களுக்கு அளித்த வாக்குறுதி ஆறுதல் அளிக்கிறதாய் இருக்கிறது. யோவான் 14:27 கூறுகிறது - சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக. நம் இதயங்களில் அமைதி என்பது மிகவும் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.
வாழ்வில் சமாதானமாய் இருப்பது என்றால் எந்த பிரச்சனைகளும் இல்லாத ஒரு சூழ்நிலையாகப் பலர் கருதுகிறார்கள். ஆனால் இயேசு இங்கு குறிப்பிடுகிற சமாதானம் அதுவல்ல. எந்த பிரச்சனைகள், சோர்புகள், நோய்கள் இருந்தாலும் அதன் மத்தியிலும் நம் இருதயத்தில் நிலவும் அமைதியையே இங்கு குறிப்பிடுகிறார்.
கடுமையான பிரச்சனைகளின் மத்தியிலும் அதனை அமைதியோடு சகித்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை தேவன் தருகிறார். இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்ற நிம்மதி கிடைக்கிறது. அதனால் பயமும் கவலையும் நம்மை விட்டு நீங்கி ஒரு சமாதானம் நம்மை ஆட்கொள்ளும்.
இந்த மன அமைதியை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்ளுவது? எல்லா சூழ்நிலைகளையும் தேவனிடம் ஜெபத்தின் மூலம் ஒப்படையுங்கள். பிலிப்பியர் :4:6,7 வசனங்கள் இவ்வாறு கூறுகிறது. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
எனவே எந்த பிரச்னைகள், வந்தாலும் கர்த்தரின் கரத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டு அமைதியாக அவர் பாதத்தில் அமர்ந்திருங்கள். அவர் நம்மை சூழ்நிலைகளிலும் தாங்கி நடத்துவார். நம் வாழ்வின் இறுதி வரை அந்த தெய்வீக சமாதானத்தை நமக்குத் தருவார். உலகமும் உலகப் பொருள்களும் வழங்க முடியாத சமாதானம் நம்மை சூழ்ந்து கொள்ளும்.
We live in a world where unrest is rampant. The great epidemic in the world is disrupting economic stability and disrupting individual life. Thousands of lives are being sacrificed to the corona every day. Thus many families are distressed and distressed.
In the midst of this unrest, Jesus' promise to his disciples is comforting. John:14:27 says :Peace I Leave With You; My Peace I Give You. I Do Not Give To You As The World Gives. Do Not Let Your Hearts Be Troubled And Do Not Be Afraid. Peace in our hearts is one of the most needed.
Peace in life is considered by many to be a situation where there are no problems. But that is not the peace that Jesus is referring to here. He is referring here to the peace that prevails in our hearts in the midst of any troubles, exhaustions, and illnesses.
God gives us the mindset to endure it peacefully in the midst of serious problems. We have the peace of mind that Jesus Christ is with us. So fear and anxiety will leave us and a peace will occupy us.
How do we get this peace of mind? Surrender all circumstances to God through prayer. Philippians 4: 6,7 says, Do not be anxious over anything, but in everything by prayer and supplication along with thanksgiving let your petitions be made known to God; Then the peace of God above all understanding will guard your hearts and your minds within Christ Jesus.
So whatever problems come, surrender to the hand of the Lord and sit quietly at His feet. He will sustain us in situations. He will give us that divine peace until the end of our lives. We are surrounded by peace that the world and worldly things cannot provide.
No comments:
Post a Comment