Tuesday, February 2, 2021

நீதியின் பாதைகளில் நடத்தும் கர்த்தர்

 


சங்கீதம்:23:3

அவர்என் ஆத்துமாவைத் தேற்றி தம்முடைய நாமத்தினிமித்தம், என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 

தாவீதுஒரு இளம் ஆட்டிடையனாயிருந்த போதே கர்த்தரை தன் வாழ்க்கைக்குரிய மேய்ப்பனாகவும், தம்முடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறவராகவும்தன்இருதயத்திற்கு அமைதியை கொடுக்கிறவராகவும், ஆத்துமாவைத் தேற்றுபவராகவும் கண்டு கொண்டான். இதுவே அவர் கர்த்தரை நேசிக்கும் மனிதனாக மாற உதவியிருக்கும்.

தாவீதுகர்த்தருடைய இருதயத்திற்கு  ஏற்றவனாகமாறினார்.

I சாமுவேல்:13:14

இப்போதோஉம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர்தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒருமனுஷனைத் தமக்குத்தேடி, அவனைக்கர்த்தர் தம்முடையஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.

அப்போஸ்தலர்:13:22

பின்புஅவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின்குமாரனாகிய தாவீதைஎன் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம்அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்.

ஒருமேய்ப்பன் தன் ஆடுகளுக்கு உணவும் தண்ணீரும் தந்து அவைகளை அமைதிப்படுத்தி இளைப்பாற செய்கிறான். அது போல நம் பரம பிதாவாகிய மேய்ப்பனும் நமக்கு மன அமைதியை தந்து நம் ஆத்துமாக்களுக்கு  ஒருபெலத்தை கொடுக்கிறார்.

தாவீதுஇந்த வார்த்தைகளை எழுதிய காலத்திலிருந்து சோர்வுற்று போய் இருந்த, இருக்கும் எண்ணற்ற ஆத்துமாக்களுக்கு தலைமுறை தலைமுறையாக ஊக்கப்படுத்தும் வசனமாக இந்த வசனம் காணப்படுகிறது.

ஆடுகள்சரியான பசுமை நிறைந்த மேய்ச்சல் நிலத்தை சென்றடைய மேய்ப்பனின்  வழிகாட்டுதல் தேவை. மேய்ப்பன் அவைகளை புல்லுள்ள இடங்களுக்கு அழைத்து செல்கிறார் . அது போலத்தான் நம் பரம மேய்ப்பரும் நம்மை நீதியின் பாதைகளில் வழி நடத்தி செல்ல ஆயத்தமாய் இருக்கிறார்.

நாம்செய்யும் முட்டாள்தனமான தவறுகளில் இருந்தும் கூட நம்மை மீட்டெடுக்கிறார். பின்னர் மெதுவாக நம்மை மீண்டும் சமாதான பாதையில் நடத்துகிறார். நமக்கான சரியான பாதையில் வழிநடத்துகிறார்.

இவ்வுலகில்ஆவிக்குரிய வாழ்வை வெற்றியாக வாழ்வதற்கு தேவனுடைய வழிநடத்துதல் தேவைவழிதெரியாமல் என்ன செய்ய வேண்டும் என்று நாம் தவிக்கும் போது தேவனின் துணையை நாடுங்கள்அவர்நம்மை அழகாக நீதியின் பாதையில் நடத்துவார்மாறாதஇன்ப புது வாழ்வை நமக்கு கொடுப்பார்.

இந்தஅற்புதமான வார்த்தைகள் நம் வாழ்வின் கடினமான நாட்களில் நாம் தியானிக்கும் போது நம்மேய்ப்பராகிய இயேசுவின் முகத்தைக் காணலாம். கிருபையும், சமாதானமும், சத்தியமும் நிறைந்த, நீதியும், அன்பும் கொண்ட பாதையில் நம்மை வழி நடத்துவார். 

மேய்ப்பர் நம்மைஏன் நீதியின் பாதைகளில் நடத்தவேண்டும்?

தம்முடையநாமத்தினிமித்தம் நம்மை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்அவருடையநாமத்திற்கு கனமும் மகிமையும் நாம் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே நம்மை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

நாம்கர்த்தரை நம் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது நம் ஆத்துமாவை புதிய வாழ்விற்கு நேராய் உயிர்ப்பிக்கிறார். அதன் பின் நாம் உலக கவலைகளால் சோர்ந்து, கவலை கண்ணீரோடு இருக்கும் போது நம் கண்ணீரை துடைத்து சோர்ந்து போய் இருக்கும் ஆத்துமாவைத் தேற்றி அதற்கு பெலன் கொடுக்கிறார்.

ஒருமேய்ப்பன் தன் ஆடுகளை செங்குத்தான பாதைகளில் அல்லது ஓநாய்களின் கூட்டத்திற்குள்ளோ வழி நடத்தி செல்ல மாட்டான் . அது போல நம் கர்த்தரும் நமக்கான சரியான பாதையில் வழி நடத்துகிறார். அவர் நம்மை தீமையில் இருந்து விடுவித்து சரியான பாதையில் நடத்திச் செல்வதன் மூலம் அவர் நாமம் மகிமைப்படுகிறது.

நாம்நம் ஆத்துமாவைப் பாதுகாத்து தேற்றிக் கொள்வதாக இருந்தால் நாம் பாதுகாப்பாக உணர மாட்டோம். நாம் நடக்க வேண்டிய பாதையை கர்த்தரின் உதவியுடன் திட்டமிடாவிட்டால் தோல்வியடைந்து விடுவோம். எனவே நம் ஆத்துமாவைத் தேற்றி பாதுகாக்கும் பொறுப்பை கர்த்தரிடம் விட்டுவிடுவோம். 

சிந்திக்க

v  நாம் கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக இருக்கிறோமா ?

v  எந்தெந்த பாவங்கள் மற்றும் காரியங்கள் நீங்கள் கர்த்தரின் பிள்ளைகளாக வாழ்வதற்கு தடையாய் இருக்கிறது?

v  சிந்தித்து ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்து கொள்ளுங்கள். பின் கர்த்தரின் துணையோடு ஒவ்வொன்றாக விட்டு விட பாருங்கள். 

No comments:

Post a Comment