சங்கீதம்:23:2
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
· நாம்தாழ்ச்சியடைந்து போகாமல் நம்மை காக்கிற மேய்ப்பனாக கர்த்தர் இருக்கிறார் என்பதை சங்: 23:1 உறுதிப்படுத்துகிறது. நம்வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கர்த்தர் மேய்ப்பனாக நம்மை வழிநடத்தும் விதம் அடுத்தடுத்த வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
· ஒருஆட்டிடையன் தன் ஆடுகளை செழிப்பான புல்லுள்ள இடத்துக்கும் தண்ணீர் இருக்கும் நீர் நிலைகளுக்கும் அருகில் தான் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வான். ஆனால் ஒரு போதும் வேகமாக ஓடும் நீரோடைக்கு அழைத்து செல்ல மாட்டான். அது மிகவும் ஆபத்தானது. அமைதியான நீரோடைகளுக்கு அழைத்து சென்று அவைகளின் தாகம் தீர்க்க உதவுவான். சிறந்த மேய்ச்சலை ஆடுகள் கண்டடைய உதவுகிறான். அதன் பின் ஆடுகள் அமைதியாக ஓய்வெடுக்கும்.
அதுபோல கர்த்தரும் நம்மை ஆபத்தான பாதையின் வழியே நடத்தி செல்ல விரும்பமாட்டார். அவர் நமக்கு அமைதியையும், ஓய்வையும், நிதானத்தையும் கொடுக்க விரும்புகிறார். நம்முடையநல்ல மேய்ப்பன் நாம் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய சிறந்த வழியில் அமைதியாக வழி நடத்துவார்.
இன்றையசூழ்நிலையில் நல்ல உணவு, தண்ணீர் மற்றும் மன அமைதி ஆகிய மூன்றும் நமக்கு கிடைக்குமானால் நாம் பாக்கியவான்கள். இந்த அடிப்படை தேவைகள் கூட இல்லாதவர்கள் அல்லது தண்ணீருக்காக அலைந்து திரிபவர்கள் ஏராளம், ஏராளம்.
v நம்முடைய பாதைகளில் வரும் ஆபத்துக்களையும் கர்த்தர் அறிவார். அமைதியற்ற சூழ்நிலைகளிலும் அவர் அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் நம்மை நடத்தி செல்வார் , ஆறுதலை தருவார்.
v கர்த்தர்நம் மேய்ப்பனாக இருக்கும் போது, அவர் நம் மனதிற்கு சமாதானத்தையும் அமைதியையும் தருவார்.
v சோர்வடைந்துநிம்மதியின்றி காணப்படும் போது அனைத்தையும் கர்த்தரிடம் ஒப்படைத்து விடுங்கள். அமைதியோடு கர்த்தர் உங்களுக்கு செய்த நன்மைகளை எண்ணிப் பாருங்கள்.
o சங்கீதம்:46:10 நீங்கள்அமர்ந்திருந்துநானேதேவனென்றுஅறிந்துகொள்ளுங்கள். ஜாதிகளுக்குள்ளேஉயர்ந்திருப்பேன், பூமியிலேஉயர்ந்திருப்பேன்.
v அவர்நம் மனதை அமைதிப்படுத்தி அவர் நம் மேல் வைத்திருக்கும் அன்பை நமக்கு நினைப்பூட்டுவார். அவருடைய தூய அன்பை நெருக்கமாக அனுபவிக்க அமைதியாக காத்திருங்கள்.
o நம்அன்றாட கடமைகளில் மூழ்கியிருந்தால் அவர் தரும் அமைதியை அனுபவிக்க முடியாது. அவரை தினமும் தாகத்தோடு தேடினால் அவர் நம்மை அமைதியான பாதையில் வழி நடத்தி செல்வார்.
நம்தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நம் பரலோக மேய்ப்பன் இருக்கும் போது நாம் நம் உள்ளத்தில் ஏன் கவலைகளை தேக்கி வைக்க வேண்டும். உலக கவலைகள் உங்களை மூழ்கடித்து விட இடம் கொடாதிருங்கள். நல்ல மேய்ப்பன் இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவரே நம்மை அமைதியான பாதையில் நடத்துவார். சமாதானம் அருளுவார்.
சிந்திக்க
- v நீங்கள் கடந்து சென்ற ஆபத்துக்கள்?
- v சோர்வடைந்து காணப்பட்ட தருணங்கள் எவை ?
- v கர்த்தர் உங்களை பாதுகாத்த விதம் .
- v சமாதானத்தையும், அமைதியையும் பெற்றுக்கொண்டது எவ்வாறு?
No comments:
Post a Comment