நாள் 4 - தேவனுக்குள் மேன்மை பாராட்டி அவரைத் தொழுவோம்
சங்கீதம் : 44 : 8
தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம். உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம்.
· தேவனுக்குள் மேன்மை பாராட்டுதல் தினமும் தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒன்று.
· கர்த்தரிடமிருந்து நன்மைகளைப் பெறும் போது மட்டும் உணர்ச்சிவசப்பட்டு தேவனைக் குறித்து மேன்மை பாராட்டக் கூடாது.
· நம் ஒரே நம்பிக்கை தேவன் மட்டுமே. நீரே என் நம்பிக்கை என்பதையும் நாம் அவரை சார்ந்து வாழ்கிறோம் என்பதையும் தினம் தினம் வெளிப்படுத்த தயங்க கூடாது.
· தேவனுக்குள் மேன்மை பாராட்டுதல் என்பது தேவனை துதித்தல் ஆகும்.
· தேவனுடைய நாமத்தை தினமும் இடைவிடாமல் துதிக்க வேண்டும்.
சங்கீதம்: 34: 2
கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும் சிறுமை பட்டவர்கள் அதைக் கேட்டு மகிழ்வார்கள்
சங்கீதம்: 30: 12
என் தேவனாகிய கர்த்தாவே உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
2 கொரிந்தியர்: 10: 17
மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மை பாராட்டக் கடவன்.
ஏன் தேவனுக்குள் மேன்மை பாராட்ட வேண்டும்?
எரேமியா: 9 :24
மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நாம் எதைக் குறித்து மேன்மை பாராட்டுகிறோம்?
நம்முடைய ஆஸ்தியைக் குறித்தா?
நம்முடைய அந்தஸ்தைக் குறித்தா?
நம்முடைய படிப்பைக் குறித்தா?
இவையாவும் நிலையற்றது. நிலையான தேவனைக் குறித்து மேன்மை பாராட்டுவோம். ஏனெனில்
அவர் கிருபை உள்ளவர்
நீதி செய்கிறவர்
நியாயம் செய்கிறவர்
நான் அவரைக் குறித்து மேன்மை பாராட்டுவதில் அவர் பிரியமாய் இருக்கிறார். கர்த்தரை குறித்தே மேன்மை பாராட்டுவோம் அவருக்கு பிரியமாய் இருப்போம்