Saturday, August 21, 2021

தண்ணீரைப் போன்ற கர்த்தருடைய வார்த்தை / The word of God like water

    தண்ணீராக உருவகப்படுத்தப்பட்டிருக்கும் கர்த்தருடைய வார்த்தை நம்மை தூய்மைப்படுத்துகிறது.  அது நம்மைத் தூய்மையாக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.  இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தினாலே சுத்தமாயிருக்கிறீர்கள் என்று யோவான் : 15: 3-இல் வாசிக்கிறோம். 

    அழுக்குகள், கறைகள் படிந்த இடங்கள் தண்ணீர் ஊற்றி கழுவும் போது தூய்மையாக்கப்படுகின்றது.  அதே போல கர்த்தருடைய வார்த்தை, நம் இதயங்களில் விதைக்கப்படும் போது, நாம் பாவங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு நாம் தூய்மையாக்கப்படுகிறோம்.   

    கர்த்தருடைய வசனத்தின் படி நம்மைக் காத்துக் கொள்ளும் போது  நாம் செல்லும் வழிகளில் பரிசுத்தமாகக் காக்கப்படுகிறோம் - சங்கீதம் :119:9.  மேலும் கர்த்தருடைய வாக்கை இருதயத்தில் வைத்துக் கொள்ளும் போது கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவம் செய்யாதபடிக்கு காத்துக் கொள்ளப்படுவோம்.  

எபேசியர் :5:26-27 கூறுகிறது, 

தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,

கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

    இவ்வசனங்களில் இயேசு கிறிஸ்து தேவாலயத்தைச் சுத்திகரிக்க நிகழ்வைப் பவுல் நினைவு கூறுகிறார்.  கர்த்தர் சுத்தமான ஜலத்தை தெளிப்பதன் மூலம் அசுத்தங்கள் நீங்கி ஜனங்கள் சுத்தமாக்கப்படுகிறார்கள் என்று எசேக்கியேல் :36:25 கூறுகிறது. 

    யோவான் : 5: 5-9 வரையுள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள்.  முப்பத்தெட்டு வருஷ காலம் வ்யாதிக்கொண்டிருந்த மனிதனை தேவன் தண்ணீருக்குப் பதிலாக தம்முடைய வார்த்தையை அனுப்பி குணமாக்கின நிகழ்வை வாசிக்கிறோம்.  எல்லாரும் குளத்தின் தண்ணீரினால் சுகமாக்கப்பட்டார்கள்.  ஆனால் 38 வருஷ வியாதியஸ்தன் சுகமாக்கப்பட்ட போது கர்த்தருடைய வார்த்தை அங்கு தண்ணீராக செயல் பட்டது. 

    எனவே நாம் தினமும் தண்ணீர் குடிப்பது போல் கடவுளின் வார்த்தையைப் படியுங்கள், இதனால் நமது அசுத்தங்கள் நீங்கி, நம் இதயம், மனம் மற்றும் ஆன்மாவில் தினம் தினம் சுத்தமாக இருக்க முடியும்.

The word of the Lord that is symbolized as water purifies us. It has the power to purify us. We read in John: 15: 3 that you are cleansed by the doctrine of Jesus Christ.

Dirt and stains are cleaned by rinsing with water. Likewise when the word of the Lord is sown in our hearts, we are delivered from sin and we are cleansed.

As we guard ourselves according to the word of the Lord, we are kept holy in the ways we walk - Psalm: 119: 9. And when we keep the word of the Lord in our hearts, we will be kept from sinning against the Lord.

Ephesians: 5: 26-27 says,

 To Make Her Holy, Cleansing Her By The Washing With Water Through The Word,

And To Present Her To Himself As A Radiant Church, Without Stain Or Wrinkle Or Any Other Blemish, But Holy And Blameless.

In these verses Paul recalls the event of the cleansing of the church by Jesus. Ezekiel 36:25 says that the Lord cleanses people by removing uncleanness by sprinkling them with clean water.

 Read verses John: 5: 5-9. We read of the event in which God sent His word instead of water to heal a man who had been sick for thirty-eight years. Everyone was healed by the water of the pool. But when the 38-year-old sick man was healed the word of the Lord acts like water there.

So read the Word of God like we drink water every day so that we can get rid of our impurities and be clean in our heart, mind and soul day by day.

Sunday, August 15, 2021

ஜீவனைக் கொடுக்கும் கர்த்தருடைய வார்த்தை / Word of GOD - Gives life

     தேவனுடைய வார்த்தை ஜீவனைக் கொடுக்கிறது.  வசனங்கள் ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது என்று யோவான்: 6:63 -ம்  சொல்லுகிறது.  ஆதியிலே தேவன் தம்முடைய வார்த்தையினால் வானத்தையும், பூமியையும் அனைத்து ஜீவராசிகளையும் உண்டாக்கினார்.  ஆதியாகமம்:1 -ம் அதிகாரம் இதைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.   தேவனுடைய வார்த்தையினால் உலகங்கள் உண்டாக்கப்பட்டதென்று எபிரேயர் :11: 3- இல் வாசிக்கிறோம்.  அவர் கட்டளையிட்ட போது காற்றும் கடலும் கூட கீழ்ப்படிந்தது.

    அதே வண்ணமாக தேவனுடைய வார்த்தை நமக்கும் ஜீவனைக் கொடுக்கிறது.   நாம் சோர்ந்து போயிருக்கும் வேளைகளில் நம்மை ஊக்கப்படுத்துகிறது. 

    தாவீது தன் வாழ்நாளில் பல சவால்களை சந்தித்தார். பல துன்பங்களைச் சகித்தார்.  தாவீது கர்த்தர் தெரிந்து ஒரு ராஜாவாக மாறுவதற்கு, பல சவால்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது.  

    ஆனாலும் கர்த்தரின் வார்த்தைகள் அவரை உற்சாகமூட்டிக் கொண்டே இருந்தன.  கர்த்தரை தினமும் துதிப்பதாலும், அவர் வார்த்தைகளை தியானித்ததாலும் வாழ்வில் இடறல்கள், துன்பங்கள் வந்த போதும் விழுந்து விடாமல் முன்னேறிச் செல்வதற்கு கர்த்தர் துணையாய் இருந்தார்.  அந்த வார்த்தைகள் அவருக்கு ஜீவனைக் கொடுத்தது. எனவே கர்த்தரின் வார்த்தைகளை தியானியுங்கள். தினம் தினம் புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்வீர்கள். 

கர்த்தருடைய வார்த்தை நமக்கு கொடுக்கப்பட்டதின் நோக்கம் என்ன?


-----------------------------------------------------------------------------------------------------------------------------

    The Word of God gives life. John 6:63 says that "The words I have spoken to you—they are full of the Spirit and life."  In the beginning God created the heavens and the earth and all living things by HIS word.  Genesis chapter 1 makes this clear.  We read in Hebrews: 11: 3 that "By Faith We Understand That The Universe Was Formed At God's Command.....".  Even the wind and the sea obeyed to God's command.  

    In the same way the Word of God gives us life. It encourages us when we are tired.

    David faced many challenges in his lifetime. He endured many hardships. David had to face many challenges in order to know the Lord and to become the  king.

    Yet the words of the Lord continued to encourage him. David praised the Lord and meditate on His words daily without fail. So the Lord helped David to move forward in the face of adversity and suffering. Those words gave him life. So meditate on the words of the Lord. You will get new life day by day.

Purpose of God's Word

Sunday, August 1, 2021

கர்த்தருடைய வார்த்தை நமக்கு கொடுக்கப்பட்டதின் நோக்கம் என்ன? /Purpose of the God's Word

கர்த்தருடைய வார்த்தை நமக்கு கொடுக்கப்பட்டதின் நோக்கம் என்ன? 

1 பேதுரு 1 :3,4 இன் படி 

  • நம்மைப்  படைத்த தேவனைப்  பற்றி அறிந்து கொள்வதற்கும்,
  •  ஜீவனுக்கும் தெய்வ பக்திக்கும் வேண்டிய யாவற்றையும் பெற்றுக் கொள்வதற்கும்,
  •  இச்சையினால் உலகத்தில் உண்டான கேட்டுக்கு  தப்பிப்பதற்கும், 
  • திவ்ய சுபாவத்திற்கு பங்குள்ளவர்கள் ஆகும்படிக்கும் 

தேவன் மேன்மையான மற்றும் அருமையான வாக்குத்தத்தங்களை வேதத்தின் மூலம் நமக்கு தந்தருளி இருக்கிறார். 

2 தீமோத்தேயு:3:15,16 இன் படி 
  • வேத புத்தகம் நம்மை இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலம் இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்குகிறது.
  • நமக்குத் தேவையான உபதேசத்தை வழங்குகிறது.
  • தேவையான நேரத்தில் நம்மை கடிந்து கொள்கிறது.
  • நம்மை சீர்திருத்துகிறது.
  • நமக்கு நீதியைப் படிப்பிக்கிறது.  
இவ்வாறாக வேதம் பல விதங்களில் நமக்கு ப்ரயோஜனமாயிருக்கிறது.

வேதப் புத்தகம் ஒரு சாதாரணப் புத்தகம் அல்ல.  நம் வாழ்வில் பிரச்சனைகள் வரும் போது நாம் பல இடங்களில் இருந்தும், நமக்கு பிரியமானவர்களிடத்திலும் இருந்தும் உதவியோ, அந்தப் பிரச்சனைக்குத் தீர்வையோ எதிர்பார்ப்போம்.  ஆனால் பிரச்சனைகள் வரும் போது நாம் முதன் முதலாக திரும்பிப் பார்க்க  வேண்டியது , நம்மைப் படைத்த தேவனையும், அவர் வேதத்தின் மூலம் நமக்கு அருளிய வார்த்தைகளையுமே.  வேதத்தின் தொடக்கத்தில் இருந்தே கர்த்தர் நம் மேல் வைத்திருக்கும் அன்பும், அக்கறையும் சொல்லப்படுகிறது. 

அவர்  வாக்குத்தத்தங்களை நமக்குத் தந்தருளினது  மட்டுமன்றி அதை நிறைவேற்ற அவர் எவ்வளவு வல்லமையுள்ளவர் என்பதையும் பல தருணங்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.  நம் வாழ்வில் எப்பேர்ப்பட்ட சூழ்நிலைக்கும் தேவையான உதவி வேதத்திலிருந்து நமக்கு .கிடைக்கும்.  எனவே, அருளிய  வேதத்தை வாசித்து, 
  •  ஒரே மெய் தேவனை  கொள்வோம்.
  • இரட்சிப்பை இலவசமாகப்   பெற்றுக் கொள்வோம்.
  • தேவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம்.
  • முடிந்த வரை தேவனைப் பற்றி  அறிவித்து சாட்சியாக வாழ்வோம்.   கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். 

August - Daily Verses

 Here is a list of 31 verses for us to meditate one verse a day based on the topic  "Faith".   It will help us to grow more and more in faith upon our Lord and savious Jesus Christ.  While compiling these verses I felt the peace of Jesus inside me.

I used to write the verse every day in my journal and meditate that particular verse the whole day and it helps me to come more closer to God.  It will help us to renew our faith in Jesus everyday and we will be more stronger in mind, so that the troubles and problems of these world will be seen nothing to us. 

So grow in faith.  Be a peace maker. 



Wednesday, July 28, 2021

நம் மேல் அன்பான தேவன் நமக்கு உண்டு/We have a loving God

    ( Scroll down for English)

உலகில் அதிகமான பேரால் விரும்பி வாசிக்கப்படும் புத்தகம் வேத புத்தகம்.  அது பல நபர்களால் தேவ ஆவியினால் உந்தப்பட்டு எழுதப்பட்டது. 2 தீமோத்தேயு:3:16 -இல் அது தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

    உலகில் அதிகமாக விற்கப்படும் புத்தகமும் அதுவே.  மேலும் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட புத்தகமும் அதுவே. எபிரேயு, அரமேயம், கிரேக்கு ஆகிய மூன்று பாஷைகளில் முதல் முதலில் எழுதப்பட்டாலும் பல தேவப்பிள்ளைகளால் கர்த்தருடைய வார்த்தைகளையும், திட்டங்களையும் அனைவரும் தெரிந்து கொள்ளும்படி பல தேவ பிள்ளைகளால் மொழிபெயர்க்கப்பட்டு நம் அனைவர் கரங்களிலும் இன்று வேத புத்தகம் இருக்கிறது.  66 சிறு சிறு புத்தகங்களாக தொகுக்கப்பட்டு இருந்தாலும் மைய கருத்து ஒன்றே. மனித குலத்தை மீட்பதற்காக வந்த அன்பான தேவனின் திட்டமே.

    வேத புத்தகம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது.  பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் இருக்கிறது. 

    பழைய ஏற்பாட்டில் தேவன் மனு உரு எடுத்து யேசுவாக இவ்வுலகில் வந்ததற்கு முன் உள்ள தேவனுடைய செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளது.  

    புதிய ஏற்பாட்டில் யேசுவானவரின் பிறப்பு, வாழ்வு, ஊழியம்,  மரணம், உயிர்ப்பு, பரமேறுதல் போன்றவை சொல்லப்பட்டுள்ளது.  அதன் பின் அவருடைய சீஷர்களின் ஊழியம் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.  சீஷர்கள் சபைகளைக் கட்டி எழுப்பின விதங்கள் நிரூபங்களாக புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. 

    வேதத்தை வாசிப்பது ஒரு கிறிஸ்தவனின் தலையாயக் கடமையாகும்.  அது தேவனுக்கும் தனக்குமான உறவை மேம்படுத்துகிறது.  வேதத்தை வாசிப்பதன் மூலம் தேவனைப் பற்றியும், அவருடைய வாக்குத்தத்தங்கள், திட்டங்கள் பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடியும்.  தேவன் தந்திருக்கும் மிகப்பெரிய வாக்குத்தத்தம் யோவான்:3:16-இல் சொல்லப்பட்டுள்ளது. 

  • தேவன் நம் மேல் அன்பாய் இருக்கிறார்.
  • தம் ஒரே பேறான குமாரனை நமக்காகத் தந்தருளி இருக்கிறார்.  
  • நித்திய ஜீவனை நமக்கு வாக்குப்பண்ணி இருக்கிறார். 
    எனவே வேதத்தை வாசிப்போம், தேவனை விசுவாசிப்போம், நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வோம்.

The most loved and read book in the world is "The BIBLE". It was written by many people driven by the Spirit of God. It is clearly stated in 2 Timothy 3:16.

It is also the best-selling book in the world. It is also the most widely translated book. Although originally written in three languages, Hebrew, Aramic, and Greek, the Scriptures have been translated by many children of God so that the words and plans of the Lord may be known to all. Although compiled into 66 small books, the central idea is the same. It is the plan of the loving God who came to redeem mankind.

The Bible is divided into the Old Testament and the New Testament. There are 39 books in the Old Testament and 27 books in the New Testament.

The Old Testament describes the activities of God before Jesus came into the world as the son of God.

The New Testament tells of the birth, life, ministry, death, resurrection, and ascension of Jesus. It then tells of the ministry of his disciples. The New Testament provides evidence of the disciples' building up church.

Reading scripture is the chief duty of a Christian. It improves the relationship between God and himself/herself. By reading Scripture we can learn about God and His promises and plans. The greatest promise God has made is in John 3:16.
  • God is loving  us.
  • He has given his only begotten Son for us.
  • He has promised us eternal life.
     So let us read the scriptures, believe in God, and receive eternal life.