Thursday, February 4, 2021

பந்தியை ஆயத்தப்படுத்தும் மேய்ப்பர்

 

சங்கீதம்:23:5

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 

பந்தியை ஆயத்தப்படுத்தும் மேய்ப்பர்.

  • v  கர்த்தருடைய கோலும் தடியும் நம்மை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் என்று நான்காம் வசனத்தில் பார்த்தோம். மேலும்  அந்த எதிரிகளின் முன்பாகவே கர்த்தர் நம்மை நன்மைகளினால் நிரப்புவார்.
  • v  நம் தனிப்பட்ட வாழ்வில் கர்த்தர் நம் எதிரிகளுக்கு முன்பாக தொலைநோக்கு பார்வையோடு வைத்திருக்க்கிற ஆசீர்வாதங்களை குறிக்கிறது இவ்வசனம்.
  • v மேய்ப்பன் ஆடுகள் செல்லும் வழியில் இருக்கும் ஆபத்து நிறைந்த கற்கள் முட்கள் ஆகியற்றை அகற்றி அவற்றை நடத்தி கொண்டு போவான்.

எதிரிகள் நிறைந்த சூழல் தாவீதுக்கு பல நேரங்களில் உருவானது.  கைவிடப்பட்டதாக நினைத்த நேரத்தில் கடவுளின் ஆசீர்வாதங்களின் விருந்தை அனுபவித்து மகிழ்ந்தார். தைரியமாகவும், நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் முன்னோக்கி செல்கிறார் தாவீது. சவுல்ராஜா அவனை கொல்ல எத்தனித்த போது அவன் பாதுகாப்பாக வைக்கப்பட்டான்.  

ஆடுகளுக்காக  சிங்கத்தோடும் கரடியோடும் கூட போராடிய போதும் பாதுகாக்கப்பட்டான். கோலியாத்தின் கையினின்று பாதுகாக்கப்பட்டான்.

நாம் ஒரு பிரச்சனையில் இருந்து விடுபடும்போது எவ்வளவுசந்தோஷபடுவோம்.  மனதிற்குள் துள்ளி குதிப்போம். ஆனால் தாவீதிற்கு எதிராளிகள் மத்தியில் விருந்து சாப்பிடும் அனுபவமாக இருந்தது.

வசனம் 2 இல் அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் வழி நடத்தி சென்ற மேய்ப்பன் வசனம் 5 இல் ஒரு பந்தியையே ஆயத்தப்படுத்தி இருக்கிறார். அதிகமான அன்போடும், கவனத்தோடும் ஒரு விருந்தை ஏற்படுத்தி இருக்கிறார். நம் தலையை எண்ணெயினால் அபிஷேகம் பண்ணி இருக்கிறார். அமர்ந்த தண்ணீர்கள் வழி நடத்தி சென்ற மேய்ப்பன் இப்போது நிரம்பி வழியும் பாத்திரத்தின் நடுவில் நம்மை உட்க்கார செய்திருக்கிறார்.

இந்த வீழ்ச்சியடைந்த உலகத்தின் மத்தியில் நாம் வாழ வேண்டி இருந்தாலும் சமாதானத்தை தருகிற இயேசு கிறிஸ்துவினால் நம் இருதயம் சமாதானத்தோடு காக்கப்படுகிறது.

நிரம்பி வழியச் செய்யும் கர்த்தர்.

v ஆட்டிடையன் மேய்ச்சலின் இறுதியில் ஆடுகளை இளைப்பாற கிடைக்கு அழைத்து வந்து அவற்றிற்கு ஏதேனும் காயங்கள் இருந்தால் எண்ணெய்பூசி அதைகுணமாக்கும் முயற்சியில் ஈடுபடுவார். இது ஆடுகளை குணப்படுத்தி புத்துணர்ச்சி ஊட்டும்.

கர்த்தருடைய அதிகமான பாதுகாப்பு நமக்கு தரப்பட்டிருக்கிறது. பயம், கவலை, சந்தேகம்மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் பாதுகாப்பு அருளுகிறார்.

எதிரிகளின் மத்தியிலும் கர்த்தர் தமது நன்மைகளினால் நம்மை நிரம்பி வழியச் செய்வார். மேலும் அவர் நம்மை முழுமையான நன்மைகளினால் நிரப்ப நாமும் அவர் மேல் நம் முழு விசுவாசத்தையும் வைக்க வேண்டும். இதுவே கர்த்தர் நம் மீது வைத்திருக்கும்எதிர்பார்ப்பு. அதை நிறைவேற்றுங்கள். 

சிந்திக்க

v  கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்ந்திருக்கிறீர்களா?

 

No comments:

Post a Comment