வாழ்வில் துன்பங்கள் துயரங்கள் நோய்கள் இவைகளினால் சோர்ந்து போய் இருக்கலாம். பொருளாதார நெருக்கடிகள் நம்மை மனமடிவாக்கலாம். ஆனாலும் சோர்ந்து போக வேண்டாம். நமக்கு இளைப்பாறுதல் தரும் கர்த்தர் நமக்கு உண்டு. அவரைச் சார்ந்து வாழ்வோம். எல்லா பிரச்சனைகள் மத்தியிலும் மனஅமைதியை நமக்கு கர்த்தர் தருவார். கலங்காதீர்கள்.
நாம் களைத்திருக்கும் போது சிலுவை நிழலில் தஞ்சம் புகுவோம். கர்த்தர் நமக்கு இளைப்பாறுதல் தந்து சுகமாய் நம்மைத் தங்கப்பண்ணுவார்.
சங்கீதம்:116:7
என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.
No comments:
Post a Comment