அனைவருக்கும் புது வருட நல்வாழ்த்துக்கள்.
2 கொரிந்தியர் : 5 : 17
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
பழைய வருடம் கடந்து போய் விட்டது. பழைய வருடத்தில் நம் ஜீவியம் எப்படி இருந்தது?
கிறிஸ்துவுக்குள்ளான ஜீவியமா ? அவரைப் பிரியப்படுத்தி வாழ்ந்தோமா? கிறிஸ்துவுக்கு பிரியமான ஜீவியமாக இருந்திருந்தால் சந்தோஷம். இல்லை கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை நாம் இதுவரை வாழவில்லை என்றால் இன்று முடிவெடுங்கள். கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை வாழுங்கள்.
கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை என்பது என்ன?
நாம் எதைச் செய்தாலும் கர்த்தர் மகிமைப்படுவாரா என்று சிந்தியுங்கள். கர்த்தர் நாமம் தூஷிக்கப்படும் என்றால் அதைச் செய்யாதிருங்கள். நாம் புது சிருஷ்டியாக மாற்றப்படுவோம்.
நம் இதயம், கண்கள், காதுகள், கால்கள், கைகள், சிந்தனை ஒவ்வொன்றும் கர்த்தருக்கு பிரியமானவைகளைச் செய்யும் ஒரு புது சிருஷ்டியாக மாற்றப்படும். பழைய பாவங்கள், நடக்கைகள், சிந்தனைகள், செயல்கள் ஒவ்வொன்றும் ஒழிந்து போய்விடும். இப்படியாக ஒவ்வொருவரும் மாற்றம் பெறும் பொழுது குடும்பங்களில் மகிழ்ச்சி உண்டாகும். சபைகளில் சாட்சிகள் பெருகும். அதுவே கர்த்தரின் ராஜ்ஜியம் விரிவடைய உதவி செய்யும்.
- · பழையவைகள் ஒழிந்து போகட்டும்.
- · எல்லாம் புதிதாகட்டும்.
எசேக்கியேல் :36 : 26
உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
சங்கீதம் : 51 : 10
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
ஜெபம்:
அன்புள்ள கர்த்தாவே, இந்த புதிய வருடத்திற்குள் நாங்கள் பிரவேசிக்க கிருபை செய்ததற்க்காய் ஸ்தோத்திரம். எங்கள் பழைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து எங்களை புது சிருஷ்டியாக மாற்றும். நவமான ஆவியைக் கொடுத்து எங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியை கட்டளை இடும். கள்ள இருதயத்தை எடுத்து சதையான இருதயத்தைக் கொடும். சுத்த இருதயத்தை எங்களிலே சிருஷ்டித்து நிலைவரமான ஆவியை எங்கள் உள்ளத்திலே புதுப்பியும். இயேசுவின் நாமத்தில் ஆமென்.
Amen. May the Lord make us a new creation in this New Year and help us to live a life pleasing to Him.
ReplyDelete